ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
32 : 53

اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ— اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ— هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ— فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ— هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠

53.32. அவர்கள் சிறு பாவங்களைத்தவிர பெரும் பாவங்களைவிட்டும் மானக்கேடான பாவங்களைவிட்டும் விலகியிருக்கிறார்கள். பெரும் பாவங்களைவிட்டுத் தவிர்ந்து நற்செயல்களில் அதிகமாக ஈடுபட்டால் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும், -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன். அடியார்கள் பாவமன்னிப்புக் கோரும்போது அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான். அவன் உங்களின் தந்தை ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதே, உங்கள் அன்னையரின் வயிற்றில் படிப்படியாக நீங்கள் படைக்கப்பட்டபோதே உங்களின் நிலைகளையும் விவகாரங்களையும் குறித்து நன்கறிவான். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே உங்களை நீங்களே இறையச்சமுடையவர்கள் என்று புகழாதீர்கள். உங்களில் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களை அவன் நன்கறிந்தவன்.
info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• انقسام الذنوب إلى كبائر وصغائر.
1. பாவங்கள் சிறு பாவங்கள், பெரும் பாவங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. info

• خطورة التقوُّل على الله بغير علم.
2. அறிவின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதன் விபரீதம் info

• النهي عن تزكية النفس.
3. தன்னைத் தானே தூய்மையானவன் என்று கூறுவதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளது. info