ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
32 : 52

اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ

52.32. மாறாக அவர்களின் அறிவு “நிச்சயமாக அவர் ஒரு ஜோதிடர், பைத்தியக்காரர் என்று கூறத் தூண்டுகிறதா?” அவர்கள் ஒரு மனிதனிடம் சேர்ந்து இருக்க முடியாத விஷயங்களை சேர்த்துக் கூறுகிறார்கள். மாறாக அவர்கள் வரம்புகளை மீறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆகவே மார்க்கத்தின் பக்கமோ, பகுத்தறிவின் பக்கமோ அவர்கள் திரும்ப மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
33 : 52

اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ— بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ

52.33. அல்லது நிச்சயமாக முஹம்மது இந்தக் குர்ஆனை சுயமாகப் புனைந்துள்ளார். அவருக்கு வஹி அறிவிக்கப்படவில்லை என்று கூறுகிறார்களா? அவர் அதனை சுயமாகப் புனைந்து கூறவில்லை. மாறாக அவர்கள் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொள்ளும் மக்களாக இருக்கிறார்கள். அதனால் அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்று கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
34 : 52

فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ

52.34. நிச்சயமாக அவர் அதனை சுயமாகப் புனைந்துள்ளார் என்ற கூற்றில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்கள் அதுபோன்ற செய்தியை புனைந்து கொண்டுவரட்டும். info
التفاسير:

external-link copy
35 : 52

اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ

52.35. அல்லது அவர்கள் அவர்களை படைக்கும் படைப்பாளனின்றி படைக்கப்பட்டார்களா? அல்லது தங்களைத் தாங்களே அவர்கள் படைத்துக் கொண்டார்களா? படைப்பாளனின்றி எந்தப் படைப்பும் உருவாகிவிட முடியாது. யாரும் தம்மை தாமாகப் படைத்துவிட முடியாது. பிறகு ஏன் அவர்கள் தங்களைப் படைத்தவனை வணங்குவதில்லை? info
التفاسير:

external-link copy
36 : 52

اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ— بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ

52.36. அல்லது அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? மாறாக அல்லாஹ்தான் அவர்களைப் படைத்தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அவனை உறுதியாக நம்பியிருந்தால் அவன் ஒருவனையே ஏற்றுக் கொண்டிருப்பார்கள். அவனுடைய தூதரின்மீது நம்பிக்கைகொண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
37 : 52

اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ

52.37. அல்லது அவர்களிடத்தில் உம் இறைவனின் வாழ்வாதார அருட்களஞ்சியங்கள் இருக்கின்றனவா? அவற்றை அவர்கள் தாம் நாடியவர்களுக்கு வழங்குகிறார்களா? மேலும் நபித்துவத்தையும் தாம் நாடியவர்களுக்கு வழங்கி தாம் நாடியவர்களுக்குத் தடுப்பதற்கு அவர்களிடமா நாட்டம் உள்ளது? அல்லது அவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களா? info
التفاسير:

external-link copy
38 : 52

اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ— فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ

52.38. அல்லது அவர்களிடத்தில் ஏணி இருந்து அதன்மூலம் அவர்கள் வானத்தில் ஏறி அல்லாஹ் அறிவிக்கும் வஹியைச் செவியுற்று நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்துகொண்டார்களா? அவர்களில் அவ்வாறு வஹியைச் செவியுற்றவர் நிச்சயமாக தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக வாதிடுவதற்குத் தெளிவான ஆதாரத்தைக் கொண்டுவரட்டும். info
التفاسير:

external-link copy
39 : 52

اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ

52.39. அல்லது அவனுக்கு நீங்கள் வெறுக்கும் பெண் பிள்ளைகளா? உங்களுக்கு நீங்கள் விரும்பும் ஆண் பிள்ளைகளா? info
التفاسير:

external-link copy
40 : 52

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ

52.40. -தூதரே!- உம் இறைவனிடமிருந்து நீர் எடுத்துரைக்கும் தூதுப்பணிக்காக அவர்களிடம் கூலி கேட்கின்றீரா? அதன் காரணமாக அவர்கள் சுமக்க முடியாத அளவுக்கு பொறுப்பு சாட்டப்பட்டு விட்டார்களா? info
التفاسير:

external-link copy
41 : 52

اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ

52.41. அல்லது அவர்களிடத்தில் மறைவான ஞானம் இருந்து அவர்கள் அறியும் மறைவான விடயங்களை மக்களுக்காக எழுதிக் கொண்டிருக்கிறார்களா? அதிலிருந்து தாங்கள் நாடியதை அவர்களுக்கு அறிவிக்கிறார்களா? info
التفاسير:

external-link copy
42 : 52

اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ— فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ

52.42. அல்லது இந்த பொய்ப்பிப்பாளர்கள் உமக்கு எதிராகவும் உம் மார்க்கத்திற்கு எதிராகவும் சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா? அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வீராக. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள்தாம் சூழ்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். நீர் அல்ல. info
التفاسير:

external-link copy
43 : 52

اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ— سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟

52.43. அல்லது அவர்களுக்கு அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இருக்கின்றானா? அவர்கள் இணைத்துக்கூறும் இணைகளிலிருந்து அவன் தூய்மையானவன். மேற்குறிப்பிட்டவை அனைத்தும் நிகழவும் இல்லை. நிகழப்போவதும் சாத்தியமில்லை. info
التفاسير:

external-link copy
44 : 52

وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟

52.44. அவர்கள் வானத்திலிருந்து ஒரு துண்டு கீழே விழுவதைப் பார்த்தாலும் அதைக்குறித்து “வழக்கத்தைப்போன்று ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த மேகங்கள்தான்” என்று கூறுவார்கள். அதனைக் கொண்டு படிப்பினை பெறுவதுமில்லை, நம்பிக்கைகொள்வதுமில்லை. info
التفاسير:

external-link copy
45 : 52

فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ

52.45. -தூதரே!- அவர்கள் வேதனை செய்யப்படும் நாளான மறுமையைச் சந்திக்கும்வரை அவர்களின் பிடிவாதத்திலும் நிராகரிப்பிலும் அவர்களை விட்டுவிடுவீராக. info
التفاسير:

external-link copy
46 : 52

یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

52.46. அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்கள் வேதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு உதவிசெய்யப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
47 : 52

وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

52.47. நிச்சயமாக இணைவைத்தல் மற்றும் பாவங்கள் மூலம் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையின் வேதனைக்கு முன்னால் இவ்வுலகில் கொலையும் கைதும் கப்ரில் மண்ணறை வேதனையும் உள்ளது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறிய மாட்டார்கள். அதனால்தான் தமது நிராகரிப்பில் நிலைத்திருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
48 : 52

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ

52.48. -தூதரே!- உம் இறைவனின் தீர்ப்பிற்காக, அவனுடைய மார்க்க சட்டத்திற்காக பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக நீர் நம்முடைய கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கின்றீர். தூக்கத்திலிருந்து எழும் போது உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக. info
التفاسير:

external-link copy
49 : 52

وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠

52.49. இரவிலும் உம் இறைவனைப் புகழ்வீராக. அவனுக்காகத் தொழுவீராக. பகலின் பிரகாசத்தால் நட்சத்திரங்கள் மறையும் சமயத்தில் அதிகாலைத் தொழுகையைத் தொழுவீராக. info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الطغيان سبب من أسباب الضلال.
1. வரம்புமீறல் வழிகேட்டிற்கான காரணிகளில் ஒன்றாகும். info

• أهمية الجدال العقلي في إثبات حقائق الدين.
2.மார்க்கத்தின் யதார்த்தங்களை நிறுவுவதில் பகுத்தறிவு ரீதியான வாதத்தின் முக்கியத்துவம். info

• ثبوت عذاب البَرْزَخ.
3. மண்ணறையின் வேதனை உறுதியாகிறது. info