ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
49 : 5

وَاَنِ احْكُمْ بَیْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ یَّفْتِنُوْكَ عَنْ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكَ ؕ— فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّصِیْبَهُمْ بِبَعْضِ ذُنُوْبِهِمْ ؕ— وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ ۟

5.49. தூதரே! அல்லாஹ் உமக்கு இறக்கியதன்படி அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக. மனஇச்சையைப் பின்பற்றியதால் தோன்றும் அவர்களின் கருத்துகளைப் பின்பற்றாதீர். அல்லாஹ் உமக்கு இறக்கிய சிலவற்றைவிட்டும் அவர்கள் உம்மை வழிகெடுத்துவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பீராக. இந்த முயற்சியில் அவர்கள் கொஞ்சமும் சோர்வடைந்துவிட மாட்டார்கள். அல்லாஹ் உம்மீது இறக்கியதன் படி தீர்ப்புச் செய்வதை அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களின் சில பாவங்களுக்குத் தண்டனையை இவ்வுலகிலும், அனைத்துப் பாவங்களுக்கான தண்டனையை மறுமையிலும் வழங்க விரும்புகிறான் என்பதை அறிந்துகொள்வீராக. மனிதர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்களாகவே இருக்கிறார்கள். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الأنبياء متفقون في أصول الدين مع وجود بعض الفروق بين شرائعهم في الفروع.
1. மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் தூதர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். கிளை அம்சங்களான சட்டதிட்டங்களில் சிறு வேறுபாடுகள் காணப்படுகிறது. info

• وجوب تحكيم شرع الله والإعراض عمّا عداه من الأهواء.
2. அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக்கொள்வதும் அவற்றைத் தவிரவுள்ள மனஇச்சைகளைப் புறக்கணித்துவிடுவதும் கட்டாயமாகும். info

• ذم التحاكم إلى أحكام أهل الجاهلية وأعرافهم.
3. அறியாமைக் கால சட்டங்களின்படியோ வழக்கத்தின்படியோ தீர்ப்புத் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது. info