ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
47 : 40

وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟

40.47. -தூதரே!- நரகவாசிகளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்வதை நினைவுகூர்வீராக. பின்பற்றிய பலவீனமான தொண்டர்கள் பின்பற்றப்பட்ட கர்வம்கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “நிச்சயமாக உலகில் நாங்கள் வழிகேட்டில் உங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தோம். அல்லாஹ்வின் வேதனையில் சிறிதளவையாவது எங்களுக்குப் பகரமாக நீங்கள் சுமந்து எங்களை விட்டும் விலக்கி வைப்பீர்களா?” info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• أهمية التوكل على الله.
1. அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பதன் முக்கியத்துவம். info

• نجاة الداعي إلى الحق من مكر أعدائه.
2. சத்தியத்தின் பக்கம் அழைக்கும் அழைப்பாளன் தன் எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும் பாதுகாக்கப்படுகிறான். info

• ثبوت عذاب البرزخ.
3. மண்ணறை வேதனை (பர்ஸஹ்) உண்டு என்பது உறுதியாகிறது. info

• تعلّق الكافرين بأي سبب يريحهم من النار ولو لمدة محدودة، وهذا لن يحصل أبدًا.
4. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும் தமக்கு நரகிலிருந்து விடுதலையளிக்கும் எந்த காரணியையாவது நிராகரிப்பாளர்கள் எடுத்துக்கொள்ளுதல். ஆனால் அது ஒரு போதும் முடியாது. info