ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
75 : 4

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ— وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ— وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ

4.75. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகவும் அவனுடைய பாதையில் போர் புரிவதை விட்டும் உங்களை தடுப்பது யாது? அந்தப் பலவீனமானவர்கள், “மக்காவிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக. அங்கு வசிக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அவனுடைய அடியார்களின்மீது வரம்பு மீறும் அநியாயக்காரர்களாக இருக்கின்றார்கள். எங்களைப் பராமரித்துப் பாதுகாக்கக்கூடியவரையும், எங்களை விட்டும் தீங்கைத் தடுக்கும் உதவியாளரையும் உன் புறத்திலிருந்து ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• وجوب القتال لإعلاء كلمة الله ونصرة المستضعفين، وذم الخوف والجبن والاعتراض على أحكام الله.
1. அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனர்களுக்கு உதவிசெய்வதற்காகவும் போர்செய்வது கடமையாகும். பயம், கோழைத்தனம், அல்லாஹ்வின் சட்டங்களை ஆட்சேபித்தல் ஆகிய பண்புகள் இகழப்பட்டுள்ளன. info

• الدار الآخرة خير من الدنيا وما فيها من متاع وشهوات لمن اتقى الله تعالى وعمل بطاعته.
2. அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்போருக்கு இந்த உலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்கள் அனைத்தைக்காட்டிலும் மறுமையின் இன்பங்களே சிறந்தவையாகும். info

• الخير والشر كله بقدر الله، وقد يبتلي الله عباده ببعض السوء في الدنيا لأسباب، منها: ذنوبهم ومعاصيهم.
3.அனைத்து நலவுகளும் தீமைகளும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கின்றன. பாவங்கள் போன்ற சில காரணங்களினால் சில துன்பங்களைக்கொண்டு தனது அடியார்களை அல்லாஹ் இவ்வுலகில் சோதிப்பான். info