ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
74 : 36

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

36.74. இணைவைப்பாளர்கள் தங்களுக்கு உதவி செய்யும்பொருட்டு அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை தெய்வங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவை அவர்களை அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பாதுகாத்து உதவும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் அவற்றை வணங்கி வழிபடுகின்றனர். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• من فضل الله ونعمته على الناس تذليل الأنعام لهم، وتسخيرها لمنافعهم المختلفة.
1. அல்லாஹ் மனிதர்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்று, அவர்களுக்கு கால்நடைகளை கட்டுப்பட்டதாக ஆக்கி அவர்களது பல்வேறு பயன்பாடுகளுக்காக வசப்படுத்தியமையாகும். info

• وفرة الأدلة العقلية على يوم القيامة وإعراض المشركين عنها.
2. மறுமை நாள் பற்றி பகுத்தறிவு ரீதியான போதுமான ஆதாரங்கள் இருந்தும் அவற்றை இணைவைப்பாளர்கள் புறக்கணித்தல். info

• من صفات الله تعالى أن علمه تعالى محيط بجميع مخلوقاته في جميع أحوالها، في جميع الأوقات، ويعلم ما تنقص الأرض من أجساد الأموات وما يبقى، ويعلم الغيب والشهادة.
3. அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அவனின் அறிவு படைப்புகள் அனைத்தையும், அவற்றின் அனைத்து நிலைகளையும் அனைத்து நேரங்களையும் சூழ்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பூமி எந்த அளவு குறைக்கின்றது, எந்த அளவு விட்டுவைக்கிறது என்பதை அவன் அறிவான். வெளிப்படையானதையும் மறைவானதையும் அவன் அறிவான். info