ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
12 : 25

اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِیْدٍ سَمِعُوْا لَهَا تَغَیُّظًا وَّزَفِیْرًا ۟

25.12. நிராகரிப்பாளர்கள் கொண்டு வரப்படும் போது அவர்களை தூரத்திலிருந்து நரகம் காணும் போது, அவர்கள் மீதுள்ள அதன் கடும் கோபத்தினால் அதன் கடுமையான கொந்தளிப்பையும் பயங்கரமான இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள். info
التفاسير:

external-link copy
13 : 25

وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَیِّقًا مُّقَرَّنِیْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۟ؕ

25.13. இந்த நிராகரிப்பாளர்கள் அவர்களது கரங்கள் கழுத்துகளுடன் இணைத்து விலங்கிடப்பட்டவர்களாக நரகத்தில் நெருக்கடியான இடத்தில் எறியப்படும்போது அதிலிருந்து விடுபட வேண்டி அழிவை அழைப்பார்கள். info
التفاسير:

external-link copy
14 : 25

لَا تَدْعُوا الْیَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِیْرًا ۟

25.14. -நிராகரிப்பாளர்களே!- இன்று நீங்கள் ஒரு அழிவை அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழையுங்கள். உங்களின் கோரிக்கை ஏற்கப்படாது. மாறாக நீங்கள் வேதனை மிக்க தண்டனையில் நிலையாக வீழ்ந்திருப்பீர்கள். info
التفاسير:

external-link copy
15 : 25

قُلْ اَذٰلِكَ خَیْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِیْرًا ۟

25.15. -தூதரே!- நீர் கூறுவீராக: “மேலே வர்ணிக்கப்பட்ட வேதனை உங்களுக்குச் சிறந்ததா? அல்லது நிறுத்தப்படாத நிலையான அருட்கொடைகளை உள்ளடக்கிய சுவனமா? அதைத்தான் நம்பிக்கைகொண்ட, தன்னை அஞ்சக்கூடிய அடியார்களுக்கு கூலியாகவும், மறுமையில் திரும்புமிடமாகவும் அல்லாஹ் வாக்களித்துள்ளான். info
التفاسير:

external-link copy
16 : 25

لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ خٰلِدِیْنَ ؕ— كَانَ عَلٰی رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ۟

25.16. அந்த சுவர்க்கத்தில் அவர்கள் விரும்பும் இன்பங்கள் உண்டு. இது அல்லாஹ் அளித்த வாக்குறுதியாகும். அவனை அஞ்சக்கூடிய அடியார்கள் அவனிடம் அதனைக் கேட்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். தன் வாக்குறுதிக்கு மாறுசெய்ய மாட்டான். info
التفاسير:

external-link copy
17 : 25

وَیَوْمَ یَحْشُرُهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِیْ هٰۤؤُلَآءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِیْلَ ۟ؕ

25.17. அல்லாஹ் நிராகரிக்கும் இணைவைப்பாளர்களையும் அல்லாஹ்வை விடுத்து அவர்கள் வணங்கிய தெய்வங்களையும் ஒன்றுதிரட்டும் நாளில் வணங்கியவர்களைக் கண்டிக்கும் விதமாக வணங்கப்பட்டவர்களிடம் அவன் கேட்பான்: “நீங்கள்தாம் உங்களை வணங்குமாறு கூறி என் அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாங்களாகவே வழிகெட்டு விட்டார்களா?” info
التفاسير:

external-link copy
18 : 25

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ— وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟

25.18. வணங்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ பரிசுத்தமானவன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னைத் தவிர வேறு இறைநேசர்களை பாதுகாவலர்களை ஏற்படுத்திக்கொள்வது எங்களுக்கு உகந்ததல்ல. நாங்கள் எவ்வாறு உன்னைவிடுத்து எங்களை வணங்குமாறு உன் அடியார்களை அழைத்திருப்போம்? ஆயினும் எங்கள் இறைவா! நீ இந்த இணைவைப்பாளர்களையும் இவர்களின் முன்னோர்களையும் படிப்படியாக தண்டிக்கும்பொருட்டு உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்தாய். அதனால் அவர்கள் உன்னை மறந்துவிட்டார்கள். உன்னுடன் மற்றவர்களையும் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் துர்பாக்கியத்தினால் அவர்கள் அழிவுக்குரிய சமூகமாக இருந்தார்கள்.” info
التفاسير:

external-link copy
19 : 25

فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَ ۙ— فَمَا تَسْتَطِیْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًا ۚ— وَمَنْ یَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِیْرًا ۟

25.19. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கியவர்கள் அவர்களைப் பற்றி நீங்கள் கூறியவற்றில் உங்களைப் பொய்யர்களாக்கிவிட்டார்கள். உங்களால் உங்களை விட்டும் வேதனையை அகற்றவோ உதவிபுரியவோ முடியாது. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் மூலம் அநியாயம் செய்கிறாரோ நாம் அவரை மேற்கூறப்பட்டவர்களுக்கு சுவைக்கச் செய்ததைப் போன்று கடுமையான முறையில் வேதனையை சுவைக்கச் செய்வோம். info
التفاسير:

external-link copy
20 : 25

وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ— وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ— اَتَصْبِرُوْنَ ۚ— وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠

25.20. -தூதரே!- உமக்கு முன்னர் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்கள் உணவு உண்ணக்கூடியவர்களாகவும் கடைவீதிகளில் உலாவக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். நீர் தூதர்களில் புதுமையானவர் அல்ல. -மனிதர்களே!- செல்வம், வறுமை, ஆரோக்கியம், நோய் போன்ற வேறுபாட்டின் காரணமாக உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். நீங்கள் உங்களின் சோதனையில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்களா? அல்லாஹ் அதற்காக உங்களுக்குக் கூலி வழங்குவான். பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களையும் கடைப்பிடிக்காதவர்களையும் அவனுக்குக் வழிப்படுபவர்களையும் வழிப்படாதவர்களையும் உம் இறைவன் பார்ப்பவனாக இருக்கின்றான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الجمع بين الترهيب من عذاب الله والترغيب في ثوابه.
1. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சுதல், அவனுடைய நன்மையில் ஆர்வம்கொள்ளுதல் ஆகிய இரண்டும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. info

• متع الدنيا مُنْسِية لذكر الله.
2. உலக இன்பங்கள் இறைநினைவை மறக்கடித்து விடும். info

• بشرية الرسل نعمة من الله للناس لسهولة التعامل معهم.
3. அல்லாஹ் மனிதர்களை தூதர்களாக அனுப்பியது மனிதர்களுக்கு மிகப் பெரிய அருட்கொடையாகும். மனிதர்களை மனிதர்களால்தான் எளிதில் அணுக முடியும். info

• تفاوت الناس في النعم والنقم اختبار إلهي لعباده.
4. இன்பங்களிலும் துன்பங்களிலும் மனிதர்களுக்கு மத்தியிலுள்ள ஏற்றத்தாழ்வு அடியார்களுக்கான இறைவனின் சோதனையாகும். info