ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
49 : 18

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَی الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَیَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَا ۚ— وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا ؕ— وَلَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا ۟۠

18.49. அவர்களுக்கு முன்னால் செயல்பதிவேடு வைக்கப்படும். அவர்களில் சிலர் தம் வலது கையால் அதனை எடுப்பார்கள்; சிலர் தம் இடது கையால் அதனை எடுப்பார்கள். -மனிதனே!- நிராகரிப்பாளர்கள் தங்களைக்குறித்து அஞ்சியவர்களாக இருப்பதைக் காண்பாய். ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தி வைத்த நிராகரிப்பையும் பாவங்களையும் அறிந்துவைத்துள்ளார்கள். அவர்கள் கூறுவார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட கேடே, சோதனையே! இந்த பதிவேட்டிற்கு என்னவாயிற்று? எங்களின் சிறிய, பெரிய செயல்கள் எதையும் இது பதிவுசெய்யாமல் விட்டுவைக்கவில்லையே!” அவர்கள் உலக வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் எழுதி பதியப்பட்டிருப்பதைக் காண்பார்கள். -தூதரே!- உம் இறைவன் யார்மீதும் அநீதி இழைக்க மாட்டான். பாவம் செய்யாமல் யாரையும் அவன் தண்டிக்க மாட்டான். அவன் தனக்குக் கட்டுப்பட்டவர்களின் கூலியை சிறிதும் குறைத்துவிட மாட்டான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• على العبد الإكثار من الباقيات الصالحات، وهي كل عمل صالح من قول أو فعل يبقى للآخرة.
1. அடியான் நிலையான நல்லறங்களை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அவைதான் மறுமைக்காக எஞ்சியிருக்கும் நற்செயல்களான ஒவ்வொரு வார்த்தையும் அல்லது செயலுமாகும். info

• على العبد تذكر أهوال القيامة، والعمل لهذا اليوم حتى ينجو من أهواله، وينعم بجنة الله ورضوانه.
2. அடியான் மறுமை நாளின் பயங்கரங்களை நினைவு கூர்ந்து, அந்த நாளின் வேதனையிலிருந்து தப்பித்து அல்லாஹ்வின் சுவனத்தையும் இறைதிருப்தியையும் பெற நற்செயல்களில் ஈடுபட வேண்டும். info

• كَرَّم الله تعالى أبانا آدم عليه السلام والجنس البشري بأجمعه بأمره الملائكة أن تسجد له في بدء الخليقة سجود تحية وتكريم.
3. அல்லாஹ் நம்முடைய தந்தை ஆதமுக்கு வானவர்கள் அனைவரையும் அவரை படைத்த ஆரம்பத்திலே கண்ணியத்திற்காகவும், முகமன் கூறும் விதமாகவும் சிரம்பணியுமாறு ஏவி, அவரையும் முழு மனித இனத்தையும் சிறப்பித்துள்ளான். info

• في الآيات الحث على اتخاذ الشيطان عدوًّا.
4. ஷைத்தானை பகைவனாக ஆக்கிக்கொள்ளும்படி மேலுள்ள வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. info