ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
67 : 12

وَقَالَ یٰبَنِیَّ لَا تَدْخُلُوْا مِنْ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ ؕ— وَمَاۤ اُغْنِیْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ— اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ؕ— عَلَیْهِ تَوَكَّلْتُ ۚ— وَعَلَیْهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟

12.67. அவர்களுக்கு அறிவுரை வழங்கியவாறு அவர்களின் தந்தை கூறினார்: “எகிப்தில் நீங்கள் அனைவரும் ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள். ஆனால் பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். இதுதான் யாரேனும் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் நீங்கள் அனைவரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு உகந்ததாகும். அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் உங்களை விட்டும் அதனைத் தடுப்பதற்காகவோ அல்லது அவன் உங்களுக்கு நன்மையளிக்க விரும்பவில்லையெனில் நான் உங்களுக்கு நன்மையளிப்பதற்காகவோ இவ்வாறு கூறவில்லை. அல்லாஹ் விதித்ததே நடக்கும். அவனது நாட்டமே நிறைவேறும். நான் என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவன் மீதே நம்பிக்கை வைத்துள்ளேன். சார்ந்திருப்பவர்கள் தங்களின் எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருக்க வேண்டும். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• الأمر بالاحتياط والحذر ممن أُثِرَ عنه غدرٌ، وقد ورد في الحديث الصحيح: ((لَا يُلْدَغُ المُؤْمِنٌ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ))، [أخرجه البخاري ومسلم].
துரோகமிழைத்தவனிடம் எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருக்குமாறு ஏவுதல். ஒரே பொந்தில் விசுவாசி இரு முறைகள் தீண்டப்படமாட்டான் என ஆதாரபூர்வமான ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. ஆதாரம் புகாரி முஸ்லிம் info

• من وجوه الاحتياط التأكد بأخذ المواثيق المؤكدة باليمين، وجواز استحلاف المخوف منه على حفظ الودائع والأمانات.
2. சத்தியத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்வது, கவனமாக இருப்பதன் ஒரு வகையாகும். அடமானம் அமானிதம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு சந்தேகத்திற்கிடமானவரிடம் சத்தியம் செய்யுமாறு கோரலாம். info

• يجوز لطالب اليمين أن يستثني بعض الأمور التي يرى أنها ليست في مقدور من يحلف اليمين.
3. சத்தியம் செய்யுமாறு வேண்டுபவர் சத்தியம் செய்பவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகக் கருதும் சில விஷயங்களை விதிவிலக்குச் செய்யலாம். info

• من الأخذ بالأسباب الاحتياط من المهالك.
4. அழிவு ஏற்படுத்துபவைகளை விட்டும் கவனமாக இருப்பது காரண காரியங்களைச் செய்வதில் உள்ளதே. info