ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
54 : 10

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِی الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ ؕ— وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ۚ— وَقُضِیَ بَیْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

10.54. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
55 : 10

اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

10.55. அறிந்து கொள்ளுங்கள், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அறிந்து கொள்ளுங்கள், நிராகரிப்பாளர்களுக்கு வேதனை அளிப்பேன் என்று அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேறியே தீரும். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்ள மாட்டார்கள். எனவே சந்தேகம் கொள்கிறார்கள். info
التفاسير:

external-link copy
56 : 10

هُوَ یُحْیٖ وَیُمِیْتُ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

10.56. அவனே இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். மறுமை நாளில் அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி அளிப்பான். info
التفاسير:

external-link copy
57 : 10

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوْرِ ۙ۬— وَهُدًی وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِیْنَ ۟

10.57. மனிதர்களே! உங்களிடம் குர்ஆன் வந்துள்ளது. அதில் அறிவுரையும் ஆர்வமூட்டலும் அச்சமூட்டலும் அடங்கியுள்ளது. அது உள்ளங்களிலுள்ள சந்தேகம் போன்ற நோய்களுக்கு நிவாரணியாக இருக்கின்றது; சத்தியப் பாதையின் பக்கம் வழிகாட்டுகிறது. அது நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் இதைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள். info
التفاسير:

external-link copy
58 : 10

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْیَفْرَحُوْا ؕ— هُوَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟

10.58. தூதரே! நீர் மக்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்துள்ள குர்ஆன், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருளாகவும் கருணையாகவும் இருக்கின்றது. குர்ஆனை உங்களுக்கு இறக்கி அல்லாஹ் உங்கள் மீது புரியும் அருளையும் கருணையையும் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். வேறொன்றைக் கொண்டுமல்ல. முஹம்மது தம் இறைவனிடமிருந்து அவர்களிடம் கொண்டு வந்தது, அழிந்து விடும் உலகில் அவர்கள் சேர்த்துவைப்பவற்றை விட சிறந்தது. info
التفاسير:

external-link copy
59 : 10

قُلْ اَرَءَیْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ— قُلْ آٰللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَی اللّٰهِ تَفْتَرُوْنَ ۟

10.59. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “அல்லாஹ் வாழ்வாதாரங்களை இறக்கி உங்கள் மீது அருள் புரிந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவற்றில் உங்களுடைய மனஇச்சைகளைக் கொண்டு சிலவற்றை தடைசெய்யப்பட்டதாகவும் சிலவற்றை அனுமதிக்கப்பட்டதாகவும் ஆக்கிவிட்டீர்கள்.” நீர் அவர்களிடம் கேட்பீராக: நீங்கள் நினைத்ததைத் தடைசெய்யும் அதிகாரத்தையும் அனுமதியளிக்கும் அதிகாரத்தையும் அல்லாஹ்தான் உங்களுக்கு அளித்தானா? அல்லது நீங்களாகவே அவன் மீது பொய்யாக புனைந்து கொண்டீர்களா? info
التفاسير:

external-link copy
60 : 10

وَمَا ظَنُّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَشْكُرُوْنَ ۟۠

10.60. பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள். info
التفاسير:

external-link copy
61 : 10

وَمَا تَكُوْنُ فِیْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَیْكُمْ شُهُوْدًا اِذْ تُفِیْضُوْنَ فِیْهِ ؕ— وَمَا یَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

10.61. -தூதரே!- நீர் ஏதேனும் ஒரு காரியத்தில் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதைப் படித்தாலும் -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் எந்த செயலைச் செய்தாலும் நீங்கள் அதனைச் செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பிக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டும், அறிந்து கொண்டும், செவியேற்றுக் கொண்டும் இருக்கிறோம். வானத்திலோ பூமியிலோ அணுவளவும், அதைவிட சிறியதும் பெரியதும் உம் இறைவனின் அறிவை விட்டும் மறையாது. அவைகள் எதுவும் தெளிவான பதிவேட்டில் பதியப்படாமல் இல்லை. சிறியது, பெரியது என எதையும் பாதுகாக்காது அவன் விட்டு விடமாட்டான். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• عظم ما ينتظر المشركين بالله من عذاب، حتى إنهم يتمنون دفعه بكل ما في الأرض، ولن يُقْبلَ منهم.
1. இணைவைப்பாளர்களுக்காக காத்திருக்கும் பெரும் வேதனையைக் குறித்து கூறப்பட்டுள்ளது. எந்தளவுக்கெனில் அவர்கள் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தாவது அதிலிருந்து தப்ப நினைப்பார்கள். அது அவர்களிடமிருந்து ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது. info

• القرآن شفاء للمؤمنين من أمراض الشهوات وأمراض الشبهات بما فيه من الهدايات والدلائل العقلية والنقلية.
2. குர்ஆன் தன்னகத்தே பொதிந்திருக்கும் வழிகாட்டல்கள், அறிவுபூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றால் இச்சைகள், சந்தேகங்கள் ஆகிய நோய்களிலிருந்து நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. info

• ينبغي للمؤمن أن يفرح بنعمة الإسلام والإيمان دون غيرهما من حطام الدنيا.
3. உலகிலுள்ள அனைத்தைக் காட்டிலும் ஈமான் மற்றும் இஸ்லாம் என்னும் அருட்கொடையைக் கொண்டு நம்பிக்கையாளன் மகிழ்ச்சியடைய வேண்டும். info

• دقة مراقبة الله لعباده وأعمالهم وخواطرهم ونياتهم.
4. அல்லாஹ் தனது அடியார்களின் செயல்கள், ஊசலாட்டங்கள், எண்ணங்கள் என்பவற்றை துல்லியமாக கண்காணிக்கின்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. info