ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߘߟߊߡߌ߬ߘߊ - ߊ߳ߺߊߓߑߘߎ-ߟߟߑߤ߭ߊߡߌ߯ߘߎ߬ ߓߊ߯ߞ߫ߏߦߌ߬ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
6 : 76

عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟

6. அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். info
التفاسير:

external-link copy
7 : 76

یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟

7. இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
8 : 76

وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟

8. மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். info
التفاسير:

external-link copy
9 : 76

اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟

9. (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்), info
التفاسير:

external-link copy
10 : 76

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟

10. ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்). info
التفاسير:

external-link copy
11 : 76

فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ

11. ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான். info
التفاسير:

external-link copy
12 : 76

وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ

12. மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்). info
التفاسير:

external-link copy
13 : 76

مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ— لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ

13. (அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
14 : 76

وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟

14. அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும். info
التفاسير:

external-link copy
15 : 76

وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَ ۟ۙ

15. (பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும். info
التفاسير:

external-link copy
16 : 76

قَوَارِیْرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟

16. (அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. info
التفاسير:

external-link copy
17 : 76

وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ

17. (இஞ்சி கலந்த) ‘சன்ஜபீல்' என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும். info
التفاسير:

external-link copy
18 : 76

عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟

18. அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும். info
التفاسير:

external-link copy
19 : 76

وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ— اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟

19. (என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர். info
التفاسير:

external-link copy
20 : 76

وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟

20. பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர். info
التفاسير:

external-link copy
21 : 76

عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ— وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ— وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟

21. அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான். info
التفاسير:

external-link copy
22 : 76

اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠

22. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்கள் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது'' (என்றும் கூறுவான்). info
التفاسير:

external-link copy
23 : 76

اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ

23. (நபியே!) நிச்சயமாக நாம் இந்த குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைக்கிறோம். info
التفاسير:

external-link copy
24 : 76

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ

24. ஆகவே, உமது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ள) நீர் பொறுத்திருப்பீராக. அவர்களிலுள்ள பாவிகளையும், நன்றி கெட்டவர்களையும் நீர் பின்பற்றாதீர். info
التفاسير:

external-link copy
25 : 76

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ

25. காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக. info
التفاسير: