ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߘߟߊߡߌ߬ߘߊ - ߊ߳ߺߊߓߑߘߎ-ߟߟߑߤ߭ߊߡߌ߯ߘߎ߬ ߓߊ߯ߞ߫ߏߦߌ߬ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
11 : 42

فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— جَعَلَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّمِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا ۚ— یَذْرَؤُكُمْ فِیْهِ ؕ— لَیْسَ كَمِثْلِهٖ شَیْءٌ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟

11. அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கிறான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
12 : 42

لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ— اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

12. வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.) info
التفاسير:

external-link copy
13 : 42

شَرَعَ لَكُمْ مِّنَ الدِّیْنِ مَا وَصّٰی بِهٖ نُوْحًا وَّالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ وَمَا وَصَّیْنَا بِهٖۤ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی وَعِیْسٰۤی اَنْ اَقِیْمُوا الدِّیْنَ وَلَا تَتَفَرَّقُوْا فِیْهِ ؕ— كَبُرَ عَلَی الْمُشْرِكِیْنَ مَا تَدْعُوْهُمْ اِلَیْهِ ؕ— اَللّٰهُ یَجْتَبِیْۤ اِلَیْهِ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْۤ اِلَیْهِ مَنْ یُّنِیْبُ ۟ؕ

13. (நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான். info
التفاسير:

external-link copy
14 : 42

وَمَا تَفَرَّقُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْیًا بَیْنَهُمْ ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی لَّقُضِیَ بَیْنَهُمْ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اُوْرِثُوا الْكِتٰبَ مِنْ بَعْدِهِمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟

14. அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர். info
التفاسير:

external-link copy
15 : 42

فَلِذٰلِكَ فَادْعُ ۚ— وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ ۚ— وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ ۚ— وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ ۚ— وَاُمِرْتُ لِاَعْدِلَ بَیْنَكُمْ ؕ— اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ ؕ— لَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ؕ— لَا حُجَّةَ بَیْنَنَا وَبَیْنَكُمْ ؕ— اَللّٰهُ یَجْمَعُ بَیْنَنَا ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟ؕ

15. ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். மேலும், (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: அல்லாஹ் வேதமென்று எதை இறக்கி வைத்தானோ அதையே நான் நம்பிக்கை கொள்கிறேன். உங்களுக்கிடையில் (உள்ள விவகாரங்களை) நீதமாகத் தீர்ப்பளிக்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்களுக்குரிய பலன் எங்களுக்குக் கிடைக்கும்; உங்கள் செயல்களுக்குரிய பலன் உங்களுக்குக் கிடைக்கும். எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒரு தர்க்கமும் வேண்டாம். நம் அனைவரையும் (மறுமையில்) அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். அவனிடமே (நாம் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது. info
التفاسير: