ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߘߟߊߡߌ߬ߘߊ - ߊ߳ߺߊߓߑߘߎ-ߟߟߑߤ߭ߊߡߌ߯ߘߎ߬ ߓߊ߯ߞ߫ߏߦߌ߬ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
47 : 41

اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ— وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ— وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ— قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ— مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ

47. (நபியே! ‘‘விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?'' என அவர்கள் அடிக்கடி உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் கூறுவீராக:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் ஒரு கனி அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை; ஒரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் எனக்கு இணையாக்கியவை(யாகிய பொய்யான தெய்வங்கள்) எங்கே?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள் (எங்கள் இறைவனே!) அவ்வாறு சாட்சி கூறுபவர்கள் ‘‘எங்களில் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று உனக்கு அறிவித்து விடுகிறோம்'' என்று கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
48 : 41

وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟

48. இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவையெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
49 : 41

لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ— وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟

49. (பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை ஒரு தீங்கு அணுகினால் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகிறான். info
التفاسير:

external-link copy
50 : 41

وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ— وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ— وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ— فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ— وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟

50. மனிதனைப் பிடித்திருந்த துன்பத்தை நீக்கிய பின்னர், நம் அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்துள்ளது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனது இறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகிறான். ஆனால், எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம். info
التفاسير:

external-link copy
51 : 41

وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ— وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟

51. மனிதனுக்கு நாம் (ஒரு) அருள் புரிந்தால், அவன் (நமக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மையும் நம் கட்டளைகளையும்) புறக்கணித்து (நம்மை விட்டும்) விலகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு தொடர்ந்தாலோ, வெகு அகல-நீளமான பிரார்த்தனை செய்(து அதை நீக்குமாறு நம்மிடம் கோரு)கிறான். info
التفاسير:

external-link copy
52 : 41

قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟

52. ‘‘(உண்மையான வேதமாகிய) இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்தும், அதை நீங்கள் நிராகரித்து விட்டால் (அதன் மீது) கடினமான விரோதத்திலிருக்கும் உங்களைவிட வெகுதூரமான வழிகேட்டிலிருப்பவர்கள் யார்? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக. info
التفاسير:

external-link copy
53 : 41

سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ— اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟

53. நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா? info
التفاسير:

external-link copy
54 : 41

اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ— اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠

54. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதைப் பற்றியும் சந்தேகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீர் அறிந்துகொள்வீராக. அவன் எல்லாவற்றையும் (தன் ஞானத்தால்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுமிருக்கிறான் என்பதையும் நிச்சயமாக (நபியே! நீர்) அறிந்துகொள்வீராக. info
التفاسير: