ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߘߟߊߡߌ߬ߘߊ - ߊ߳ߺߊߓߑߘߎ-ߟߟߑߤ߭ߊߡߌ߯ߘߎ߬ ߓߊ߯ߞ߫ߏߦߌ߬ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
23 : 34

وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ— حَتّٰۤی اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ— قَالَ رَبُّكُمْ ؕ— قَالُوا الْحَقَّ ۚ— وَهُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟

23. அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
24 : 34

قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلِ اللّٰهُ ۙ— وَاِنَّاۤ اَوْ اِیَّاكُمْ لَعَلٰی هُدًی اَوْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

24. (நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக. info
التفاسير:

external-link copy
25 : 34

قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ ۟

25. (நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்'' info
التفاسير:

external-link copy
26 : 34

قُلْ یَجْمَعُ بَیْنَنَا رَبُّنَا ثُمَّ یَفْتَحُ بَیْنَنَا بِالْحَقِّ ؕ— وَهُوَ الْفَتَّاحُ الْعَلِیْمُ ۟

26. (நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.'' info
التفاسير:

external-link copy
27 : 34

قُلْ اَرُوْنِیَ الَّذِیْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ— بَلْ هُوَ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

27. ‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير:

external-link copy
28 : 34

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِیْرًا وَّنَذِیْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟

28. (நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை. info
التفاسير:

external-link copy
29 : 34

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

29. ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். info
التفاسير:

external-link copy
30 : 34

قُلْ لَّكُمْ مِّیْعَادُ یَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ۟۠

30. அதற்கு நீர் கூறுவீராக: ‘‘உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்.'' info
التفاسير:

external-link copy
31 : 34

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِیْ بَیْنَ یَدَیْهِ ؕ— وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ— یَرْجِعُ بَعْضُهُمْ اِلٰی بَعْضِ ١لْقَوْلَ ۚ— یَقُوْلُ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِیْنَ ۟

31. ‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்). info
التفاسير: