ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߘߟߊߡߌ߬ߘߊ - ߊ߳ߺߊߓߑߘߎ-ߟߟߑߤ߭ߊߡߌ߯ߘߎ߬ ߓߊ߯ߞ߫ߏߦߌ߬ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
6 : 14

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠

6. மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்.) info
التفاسير:

external-link copy
7 : 14

وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ ۟

7. உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. info
التفاسير:

external-link copy
8 : 14

وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ— فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟

8. இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார். info
التفاسير:

external-link copy
9 : 14

اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬— وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ— لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ— جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟

9. உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
10 : 14

قَالَتْ رُسُلُهُمْ اَفِی اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یَدْعُوْكُمْ لِیَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرَكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ— قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ؕ— تُرِیْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟

10. அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு பணிந்து வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரை உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள். info
التفاسير: