पवित्र कुरअानको अर्थको अनुवाद - तमिल अनुवादः अब्दुल हमीद बाकवी ।

رقم الصفحة: 63:50 close

external-link copy
109 : 3

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

109. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். info
التفاسير:

external-link copy
110 : 3

كُنْتُمْ خَیْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ ؕ— وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَكَانَ خَیْرًا لَّهُمْ ؕ— مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ ۟

110. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். வேதத்தையுடையவர்களும் (இவ்வாறே) நம்பிக்கைகொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்டவர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகள்தான். info
التفاسير:

external-link copy
111 : 3

لَنْ یَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًی ؕ— وَاِنْ یُّقَاتِلُوْكُمْ یُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ۫— ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟

111. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
112 : 3

ضُرِبَتْ عَلَیْهِمُ الذِّلَّةُ اَیْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَیْهِمُ الْمَسْكَنَةُ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا یَكْفُرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ وَیَقْتُلُوْنَ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ ؕ— ذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا یَعْتَدُوْنَ ۟ۗ

112. அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்து கொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும். info
التفاسير:

external-link copy
113 : 3

لَیْسُوْا سَوَآءً ؕ— مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآىِٕمَةٌ یَّتْلُوْنَ اٰیٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّیْلِ وَهُمْ یَسْجُدُوْنَ ۟

113. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர். info
التفاسير:

external-link copy
114 : 3

یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ— وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟

114. அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இவர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே. info
التفاسير:

external-link copy
115 : 3

وَمَا یَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَلَنْ یُّكْفَرُوْهُ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالْمُتَّقِیْنَ ۟

115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير: