വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
62 : 8

وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ— هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ

இன்னும், (நபியே!) அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால் நிச்சயமாக உமக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவன், தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மை பலப்படுத்தி இருக்கிறான். info
التفاسير:

external-link copy
63 : 8

وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ— لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ ۙ— وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ— اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

இன்னும், அவன் அவர்களுடைய உள்ளங்களுக்கிடையில் (இணக்கத்தை ஏற்படுத்தி) ஒன்றிணைத்தான். பூமியிலுள்ளவை அனைத்தையும் நீர் செலவு செய்தாலும் அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் நீர் (இணக்கத்தை ஏற்படுத்தி) ஒன்றிணைத்திருக்க மாட்டீர். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்தான். நிச்சயமாக அவன் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
64 : 8

یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠

நபியே! அல்லாஹ்தான் உமக்கும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கும் போதுமானவன். info
التفاسير:

external-link copy
65 : 8

یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ— اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ— وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟

நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் (அவர்கள் உங்கள் எதிரிகளில்) இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
66 : 8

اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ— فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ— وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟

இப்போது அல்லாஹ் உங்களுக்கு (சட்டத்தை) இலகுவாக்கினான். இன்னும், நிச்சயமாக உங்களில் பலவீனம் உள்ளது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆக, உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு நபர்களை அவர்கள் வெல்வார்கள். இன்னும், (இத்தகைய) ஆயிரம் நபர்கள் உங்களில் இருந்தால், அல்லாஹ்வின் அனுமதியினால் (எதிரிகளில்) இரண்டாயிரம் நபர்களை அவர்கள் வெல்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். info
التفاسير:

external-link copy
67 : 8

مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ— تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ— وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

(பத்ர் போரில் கைது செய்யப்பட்ட எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்காமல், அவர்களை கைதிகளாக்குவது (பின்னர், பிணைத் தொகை வாங்கி விடுவிப்பது) நபிக்கு ஆகுமானதல்ல. (நபியின் தோழர்களே! நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
68 : 8

لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟

அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு மன்னிப்பு எனும்) விதி முந்தியிருக்கவில்லையெனில் நீங்கள் (கைதிகளிடம் மீட்புத்தொகை) வாங்கியதில் மகத்தான தண்டனை உங்களைப் பிடித்தே இருக்கும். info
التفاسير:

external-link copy
69 : 8

فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ— وَّاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

ஆகவே, நீங்கள் எதை (போரில்) வென்று சொந்தமாக்கினீர்களோ அந்த ஆகுமான நல்லதை புசியுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான். info
التفاسير: