വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
11 : 43

وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ— فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ— كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟

இன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
12 : 43

وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ

இன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான். info
التفاسير:

external-link copy
13 : 43

لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ

அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.” info
التفاسير:

external-link copy
14 : 43

وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟

“இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்” என்று நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை ஏற்படுத்திக் கொடுத்தான்). info
التفاسير:

external-link copy
15 : 43

وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠

இன்னும், அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு குழந்தைகளாக ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான். info
التفاسير:

external-link copy
16 : 43

اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟

அவன், தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டானா, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா? info
التفاسير:

external-link copy
17 : 43

وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟

அவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.) info
التفاسير:

external-link copy
18 : 43

اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟

யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கிறாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகிறீர்கள்?) info
التفاسير:

external-link copy
19 : 43

وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ— اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ— سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟

இன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
20 : 43

وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ— مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ— اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ

இவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை. info
التفاسير:

external-link copy
21 : 43

اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟

(இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?) info
التفاسير:

external-link copy
22 : 43

بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟

மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” info
التفاسير: