വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

external-link copy
28 : 30

ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ ؕ— هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِیْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِیْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِیْفَتِكُمْ اَنْفُسَكُمْ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

(இணைவைப்பாளர்களே!) அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். நாம் உங்களுக்கு (மட்டும் உரிமையாக்கி) கொடுத்த (செல்வத்)தில் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) யாரும் உங்களுக்கு பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிடுவதும் முடியுமா? அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை - (உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகள் உங்களுடன் பங்காளிகளாக ஆகுவதை பயப்படுகிறீர்கள். யாரையும் கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று நினைக்கிறீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ் எப்படி தனது படைப்புகளை தனக்கு உரிமையானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு எந்தத் தகுதியும் யாருக்கும் இல்லையே!) சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம். info
التفاسير: