വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

external-link copy
20 : 3

فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِیَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ؕ— وَقُلْ لِّلَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّیّٖنَ ءَاَسْلَمْتُمْ ؕ— فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ— وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْكَ الْبَلٰغُ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟۠

ஆக, (நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி), நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் எனது முகத்தை அல்லாஹ்விற்கு பணிய வைத்தேன். இன்னும், என்னை பின்பற்றியவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு பணிய வைத்தார்கள். நாங்கள் அனைவரும் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம்).’’ இன்னும், “வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: “நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா? (-உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குவீர்களா?)” ஆக, அவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு மட்டும்) பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். இன்னும், அவர்கள் (இந்த அழைப்பை) புறக்கணித்தால், உம்மீது கடமை எல்லாம் (சத்தியத்தை) எடுத்துச் சொல்வதுதான். அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: