വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

external-link copy
78 : 22

وَجَاهِدُوْا فِی اللّٰهِ حَقَّ جِهَادِهٖ ؕ— هُوَ اجْتَبٰىكُمْ وَمَا جَعَلَ عَلَیْكُمْ فِی الدِّیْنِ مِنْ حَرَجٍ ؕ— مِلَّةَ اَبِیْكُمْ اِبْرٰهِیْمَ ؕ— هُوَ سَمّٰىكُمُ الْمُسْلِمِیْنَ ۙ۬— مِنْ قَبْلُ وَفِیْ هٰذَا لِیَكُوْنَ الرَّسُوْلُ شَهِیْدًا عَلَیْكُمْ وَتَكُوْنُوْا شُهَدَآءَ عَلَی النَّاسِ ۖۚ— فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعْتَصِمُوْا بِاللّٰهِ ؕ— هُوَ مَوْلٰىكُمْ ۚ— فَنِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟۠

அல்லாஹ்வின் பாதையில் (இணை வைப்பவர்களிடம்) முழுமையாக போரிடுங்கள். அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள். அவன் இதற்கு முன்னரும் (-முந்தைய வேதங்களிலும்) இதிலும் (-குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் வைத்தான். காரணம், தூதர் (-முஹம்மத்) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து, முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்). ஆக, தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தைக் கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்வை உறுதியாக பற்றிப்பிடியுங்கள்! அவன்தான் உங்கள் பொறுப்பாளன் ஆவான். ஆக, அவனே சிறந்த பொறுப்பாளன். இன்னும், அவனே சிறந்த உதவியாளன் ஆவான். info
التفاسير: