വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
36 : 21

وَاِذَا رَاٰكَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ یَذْكُرُ اٰلِهَتَكُمْ ۚ— وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ ۟

(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், உம்மை கேலியாக தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். “இவரா உங்கள் கடவுள்களை விமர்ச்சிக்கிறார்” (என்று தங்களுக்குள் பேசுகிறார்கள்.) அவர்களோ (தங்களை படைத்து பரிபாலிக்கின்ற) ரஹ்மானை (நன்றியுடன்) நினைவு கூர மறுக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
37 : 21

خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ ؕ— سَاُورِیْكُمْ اٰیٰتِیْ فَلَا تَسْتَعْجِلُوْنِ ۟

மனிதன் விரைவாக படைக்கப்பட்டான். எனது (தண்டனையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு விரைவில் காண்பிப்போம். ஆகவே, என்னிடம் அவசரப்படாதீர்கள். info
التفاسير:

external-link copy
38 : 21

وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது நிகழும் என அவர்கள் (உங்களிடம்) கூறுகிறார்கள். info
التفاسير:

external-link copy
39 : 21

لَوْ یَعْلَمُ الَّذِیْنَ كَفَرُوْا حِیْنَ لَا یَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ یُنْصَرُوْنَ ۟

நிராகரிப்பாளர்கள் தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும், அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை அவர்கள் அறிந்து கொண்டால் (அல்லாஹ்வை நிராகரித்திருக்க மாட்டார்கள்). info
التفاسير:

external-link copy
40 : 21

بَلْ تَاْتِیْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا یَسْتَطِیْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟

மாறாக, அ(ந்த நரக நெருப்பான)து அவர்களிடம் திடீரென வரும். ஆக, அது அவர்களை திடுக்கிடச் செய்யும். அவர்கள் (தங்களை விட்டும்) அதை தடுப்பதற்கு இயல மாட்டார்கள். இன்னும், அவர்கள் (மன்னிப்புத் தேட) கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
41 : 21

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

உமக்கு முன்னர் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டுள்ளார்கள். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதைப் பற்றி கேலி செய்தார்களோ அதுவே சூழ்ந்து கொண்டது. info
التفاسير:

external-link copy
42 : 21

قُلْ مَنْ یَّكْلَؤُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ ؕ— بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக! “இரவிலும் பகலிலும் உங்களை ரஹ்மானிடமிருந்து பாதுகாப்பவர் யார் இருக்கிறார்?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
43 : 21

اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ؕ— لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا یُصْحَبُوْنَ ۟

அல்லது, அவர்களை (நமது தண்டனையிலிருந்து) பாதுகாக்கிற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? (இவர்கள் கடவுள்கள் என்று வணங்கும்) அவர்கள் தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் இ(ந்த நிராகரிப்ப)வர்கள் நம்மிடமிருந்து (யார் மூலமாகவும்) பாதுகாக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
44 : 21

بَلْ مَتَّعْنَا هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی طَالَ عَلَیْهِمُ الْعُمُرُ ؕ— اَفَلَا یَرَوْنَ اَنَّا نَاْتِی الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ— اَفَهُمُ الْغٰلِبُوْنَ ۟

மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமான வாழ்வளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டு சென்றது. (நீண்ட காலம் சுகமாக வாழ்வோம் என்று நினைத்தனர்.) நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (இந்த மக்காவாசிகள் மட்டும் நமது தூதரை) மிகைத்து விடுவார்களா? info
التفاسير: