വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
27 : 16

ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یُخْزِیْهِمْ وَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِیْهِمْ ؕ— قَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْیَ الْیَوْمَ وَالسُّوْٓءَ عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ

பிறகு, மறுமை நாளில் (அல்லாஹ்) அவர்களை இழிவு படுத்துவான். இன்னும், “நீங்கள் எனக்கு இணைவைத்து வணங்கிய தெய்வங்கள் எங்கே? அவர்கள் விஷயத்தில் நீங்கள் (என்னிடம்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே!” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).” info
التفاسير:

external-link copy
28 : 16

الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ ۪— فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِنْ سُوْٓءٍ ؕ— بَلٰۤی اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வானவர்கள் உயிர் கைப்பற்றுகிறார்கள். ஆக, (அப்போது அவர்கள்) “தீமை எதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கவில்லை” (என்று கூறி) முற்றிலும் பணிந்து விடுவார்கள். “அவ்வாறல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்” (என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்). info
التفاسير:

external-link copy
29 : 16

فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— فَلَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟

ஆக, “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக தங்கி விடுங்கள்.” ஆக, பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதாகும். info
التفاسير:

external-link copy
30 : 16

وَقِیْلَ لِلَّذِیْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْ ؕ— قَالُوْا خَیْرًا ؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ— وَلَدَارُ الْاٰخِرَةِ خَیْرٌ ؕ— وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِیْنَ ۟ۙ

இறையச்சம் உள்ளவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று கூறப்பட்டது. “சிறந்ததை இறக்கினான்” என்று அவர்கள் கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் அழகியது உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் இல்லமோ (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானதாகும். இன்னும், இறையச்சமுள்ளவர்களின் (மறுமை) இல்லமோ மிகச் சிறந்ததாகும். info
التفاسير:

external-link copy
31 : 16

جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ ؕ— كَذٰلِكَ یَجْزِی اللّٰهُ الْمُتَّقِیْنَ ۟ۙ

அத்ன் (என்னும்) சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுக்கு கூலி கொடுக்கிறான். info
التفاسير:

external-link copy
32 : 16

الَّذِیْنَ تَتَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ طَیِّبِیْنَ ۙ— یَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَیْكُمُ ۙ— ادْخُلُوا الْجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

இறையச்சம் உள்ளவர்களோ நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகிறார்கள். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று (வானவர்கள் அவர்களிடம்) கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
33 : 16

هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ اَمْرُ رَبِّكَ ؕ— كَذٰلِكَ فَعَلَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

வானவர்கள் தங்களிடம் வருவதை; அல்லது, உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
34 : 16

فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

ஆகவே, அவர்கள் செய்தவற்றின் தண்டனைகள் அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது. info
التفاسير: