വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

external-link copy
11 : 13

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ یَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُغَیِّرُ مَا بِقَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ؕ— وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْٓءًا فَلَا مَرَدَّ لَهٗ ۚ— وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ ۟

(மனிதனாகிய) அவனுக்கு முன்புறத்திலிருந்தும், அவனுக்குப் பின்புறத்திலிருந்தும் (அவனை பாதுகாப்பதற்காக) பின்தொடரக்கூடியவர்கள் (-ஒரு கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம் என்று மாறி மாறி வரக்கூடிய வானவர்கள் அவனுடன்) இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து (அல்லாஹ் நாடிய காலம் வரை) அவனை பாதுகாக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்ற வரை. மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; இன்னும், அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை. info
التفاسير: