വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
14 : 13

لَهٗ دَعْوَةُ الْحَقِّ ؕ— وَالَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا یَسْتَجِیْبُوْنَ لَهُمْ بِشَیْءٍ اِلَّا كَبَاسِطِ كَفَّیْهِ اِلَی الْمَآءِ لِیَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَالِغِهٖ ؕ— وَمَا دُعَآءُ الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟

(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. இவர்கள் அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் இவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் இல்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை வணங்குகின்ற) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை. info
التفاسير:

external-link copy
15 : 13

وَلِلّٰهِ یَسْجُدُ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّظِلٰلُهُمْ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟

வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்ப்பந்தமாகவும் அல்லாஹ்விற்கே சிரம் பணிகிறார்கள்; இன்னும், காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அவர்களின் நிழல்களும் அவனுக்கே சிரம் பணிகின்றன. info
التفاسير:

external-link copy
16 : 13

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلِ اللّٰهُ ؕ— قُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ لَا یَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّا ؕ— قُلْ هَلْ یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬— اَمْ هَلْ تَسْتَوِی الظُّلُمٰتُ وَالنُّوْرُ ۚ۬— اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَیْهِمْ ؕ— قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ ۟

(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (நபியே!) கூறுவீராக: (அவன்) “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவனை அன்றி, (உங்களுக்கு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு தாமே நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது, இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) இவர்களுக்கு குழப்பமடைந்து விட்டதா?” (நபியே! இதற்கு பதிலாக நீர்) கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் ஆவான். இன்னும், அவன் (நிகரற்ற) ஒருவன், (அனைவரையும்) அடக்கி ஆளுபவன் ஆவான்.” info
التفاسير:

external-link copy
17 : 13

اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَالَتْ اَوْدِیَةٌ بِقَدَرِهَا فَاحْتَمَلَ السَّیْلُ زَبَدًا رَّابِیًا ؕ— وَمِمَّا یُوْقِدُوْنَ عَلَیْهِ فِی النَّارِ ابْتِغَآءَ حِلْیَةٍ اَوْ مَتَاعٍ زَبَدٌ مِّثْلُهٗ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْحَقَّ وَالْبَاطِلَ ؕ۬— فَاَمَّا الزَّبَدُ فَیَذْهَبُ جُفَآءً ۚ— وَاَمَّا مَا یَنْفَعُ النَّاسَ فَیَمْكُثُ فِی الْاَرْضِ ؕ— كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ ۟ؕ

அவன் மேகத்திலிருந்து மழையை இறக்கினான். ஓடைகள் அவற்றின் அளவிற்கு (தண்ணீரால் நிரம்பி) ஓடின. ஆக, வெள்ளம், மிதக்கும் நுரைகளை சுமந்(து வந்)தது. மேலும், ஆபரணத்தை அல்லது (உலோகப்) பொருளை (செய்ய) நாடி நெருப்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றை) அவர்கள் பழுக்க வைப்பதிலும் அது போன்ற (அழுக்கு) நுரைகள் உண்டு. இப்படித்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் விவரிக்கிறான். ஆக, நுரையோ வீணானதாக சென்று அழிந்துவிடுகிறது. ஆனால், மனிதனுக்கு எது பலனளிக்கிறதோ அதுவே பூமியில் (நிரந்தரமாக) தங்குகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளை விவரிக்கிறான். info
التفاسير:

external-link copy
18 : 13

لِلَّذِیْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمُ الْحُسْنٰی ؔؕ— وَالَّذِیْنَ لَمْ یَسْتَجِیْبُوْا لَهٗ لَوْ اَنَّ لَهُمْ مَّا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ سُوْٓءُ الْحِسَابِ ۙ۬— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟۠

தங்கள் இறைவனு(டைய அழைப்பு)க்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நற்கூலி உண்டு. மேலும், எவர்கள் அவனு(டைய அழைப்பு)க்குப் பதிலளிக்கவில்லையோ அவர்களிடம் பூமியிலுள்ளவை அனைத்தும்; இன்னும், அதுபோன்றவையும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை மீட்புத்தொகையாக கொடுத்து தப்பித்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும். info
التفاسير: