വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
7 : 65

لِیُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ ؕ— وَمَنْ قُدِرَ عَلَیْهِ رِزْقُهٗ فَلْیُنْفِقْ مِمَّاۤ اٰتٰىهُ اللّٰهُ ؕ— لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰىهَا ؕ— سَیَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ یُّسْرًا ۟۠

65.7. வசதியுடையவர் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் தன் வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யார் வசதிக்குறைவினால் நெருக்கடியை உணர்கிறாரோ அவர் அல்லாஹ் தமக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஒருவருக்கு எந்த அளவு வழங்கியிருக்கின்றானோ அந்த அளவே அவர் மீது கடமையாக்குகிறான். அவரால் தாங்க முடியாததை அவர்மீது கடமையாக்கமாட்டான். அவரது நெருக்கடி மற்றும் துன்பத்துக்குப் பிறகு விரைவில் அல்லாஹ் அவருக்கு வசதியையும் செல்வத்தையும் வழங்கலாம். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• عدم وجوب الإرضاع على الحامل إذا طلقت.
1. விவாகரத்து செய்யப்பட்ட கர்ப்பமான பெண்கள்மீது குழந்தைக்குப் பாலூட்டும் கடமை இல்லை. info

• التكليف لا يكون إلا بالمستطاع.
2. (ஒருவனுக்கு) இயன்ற அளவே பொறுப்பு சாட்டப்படுகிறது. info

• الإيمان بقدرة الله وإحاطة علمه بكل شيء سبب للرضا وسكينة القلب.
3. அல்லாஹ்வின் ஆற்றல், அறிவால் அனைத்தையும் சூழ்ந்தறியும் தன்மை என்பவற்றை நம்புவது மனதிருப்தி மற்றும் அமைதிக்கான ஒரு காரணமாகும். info