വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
84 : 6

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ— كُلًّا هَدَیْنَا ۚ— وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ

6.84. நாம் இப்ராஹீமுக்கு அவருடைய மகன் இஸ்ஹாக்கையும் பேரன் யஃகூபையும் வழங்கினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம். அவர்களுக்கு முன்னர் நூஹிற்கு வழிகாட்டினோம். நூஹின் வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், யூசுஃப், மூஸா, அவரது சகோதரன் ஹாரூன் ஆகியோருக்கும் சத்தியப்பாதைக்கு வழிகாட்டினோம். நாம் தூதர்களுக்கு வழங்கிய இந்த கூலியைப் போலவே நன்மை செய்யும் ஏனையோருக்கும் வழங்குவோம். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• من فضائل التوحيد أنه يضمن الأمن للعبد، خاصة في الآخرة حين يفزع الناس.
1. ஓரிறைக் கொள்கையின் சிறப்புக்களில் ஒன்றுதான், அடியானுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகும். குறிப்பாக மனிதர்கள் பதற்றமடைந்திருக்கும் மறுமை நாளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றது. info

• تُقَرِّر الآيات أن جميع من سبق من الأنبياء إنما بَلَّغوا دعوتهم بتوفيق الله تعالى لا بقدرتهم.
2. முந்தைய தூதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே தங்களின் தூதை எடுத்துரைத்துனர் தமது ஆற்றலைக் கொண்டல்ல, என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. info

• الأنبياء يشتركون جميعًا في الدعوة إلى توحيد الله تعالى مع اختلاف بينهم في تفاصيل التشريع.
3. தூதர்களுக்கு மத்தியில் சட்டதிட்ட விபரங்களில் வேறுபாடு இருந்தாலும் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். info

• الاقتداء بالأنبياء سنة محمودة، وخاصة في أصول التوحيد.
4. குறிப்பாக ஓரிறைக் கொள்கையின் அடிப்படைகளில், இறைத்தூதர்களைப் பின்பற்றுவது விரும்பத்தக்க வழிமுறையாகும். info