വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
31 : 47

وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ— وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟

47.31. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வீரமரணம் அடைபவர்களையும் அவனது எதிரிகளுடனான போராட்டத்தில் பொறுமையாக நிலைத்திருப்பவர்களையும் நாம் அறிந்துகொள்ளும்பொருட்டு நிச்சயம் உங்களை, ஜிஹாத், எதிரிகளுடனான போர் ஆகியவற்றின் மூலம் சோதித்தே தீருவோம். நாம் உங்களை சோதித்து உங்களில் உண்மையாளர்களையும் பொய்யர்களையும் அறிந்துகொள்வோம். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• سرائر المنافقين وخبثهم يظهر على قسمات وجوههم وأسلوب كلامهم.
1. நயவஞ்சகர்களின் உளக்கிடக்கைகளும் தீய குணங்களும் அவர்களின் முகபாவனைகளிலும் பேசும் முறைகளிலும் வெளிப்பட்டுவிடும். info

• الاختبار سُنَّة إلهية لتمييز المؤمنين من المنافقين.
2. நயவஞ்சகர்களிடமிருந்து நம்பிக்கையாளர்களை வேறுபடுத்துவதற்காக சோதிப்பது இறைவனின் நியதியாகும். info

• تأييد الله لعباده المؤمنين بالنصر والتسديد.
3. அல்லாஹ் நம்பிக்கைகொண்ட தன் அடியார்களை தன் உதவியின்மூலம் வலுப்படுத்துகிறான். info

• من رفق الله بعباده أنه لا يطلب منهم إنفاق كل أموالهم في سبيل الله.
4. அல்லாஹ் தன் அடியார்களின்மீது காட்டும் கருணை, அவன் அவர்களின் செல்வங்கள் அனைத்தையும் தன் பாதையில் செலவுசெய்யுமாறு அவர்களிடம் வேண்டவில்லை. info