വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
20 : 46

وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ— اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ— فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠

46.20. அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய தூதர்களை பொய்ப்பித்தவர்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவதற்காக நரகத்தின் முன் நிறுத்தப்படும்போது அவர்களை இழிவுபடுத்தும்விதமாக அவர்களிடம் கூறப்படும்: “உலக வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த தூய்மையானவற்றையெல்லாம் நீங்கள் வீணடித்து அதிலுள்ள இன்பங்களை அனுபவித்தீர்கள். இன்றைய தினம் அநியாயமாக நீங்கள் பூமியில் கர்வம் கொண்டதனாலும் நிராகரித்து, பாவங்கள் புரிந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்படாததனாலும் உங்களை இழிவுபடுத்தும் வேதனையை உங்களுக்குக் கூலியாக வழங்கப்படும். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• بيان مكانة بِرِّ الوالدين في الإسلام، بخاصة في حق الأم، والتحذير من العقوق.
1. தாய், தந்தையருடன் குறிப்பாக தாயின் உரிமைகளில் நல்ல முறையில் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தலும் நோவினை செய்வதை விட்டும் எச்சரித்தலும். info

• بيان خطر التوسع في ملاذّ الدنيا؛ لأنها تشغل عن الآخرة.
2. உலக இன்பங்களில் மூழ்குவதன் விபரீதத்தை விளக்குதல். ஏனெனில் அது மறுமையை விட்டும் பராமுகமாக்கிவிடும். info

• بيان الوعيد الشديد لأصحاب الكبر والفسوق.
3. கர்வம் கொள்பவர்கள் மற்றும் பாவிகளுக்கான கடுமையான எச்சரிக்கையை விளக்குதல். info