വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
39 : 40

یٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَا مَتَاعٌ ؗ— وَّاِنَّ الْاٰخِرَةَ هِیَ دَارُ الْقَرَارِ ۟

40.39. என் சமூகமே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை அழியக்கூடிய அற்ப இன்பங்கள்தாம். அதிலுள்ள அழிந்து விடும் இன்பங்கள் உங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். திட்டமாக மறுமையின் வீடுதான் என்றும் முடிவடையாத நிலையான இன்பங்களை உள்ளடக்கியுள்ள நிலையான தங்குமிடமான வீடாகும். அதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படுங்கள். மறுமைக்காகச் செயற்படுவதை விட்டுவிட்டு உங்கள் உலக வாழ்கையில் மூழ்கிவிடுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• الجدال لإبطال الحق وإحقاق الباطل خصلة ذميمة، وهي من صفات أهل الضلال.
1. சத்தியத்தை அசத்தியம் எனக் காட்டவும் அசத்தியத்தை சத்தியம் எனக் காட்டவும் வாதம் செய்வது மோசமான பண்பாகும். இது வழிகேடர்களின் பண்புகளில் ஒன்றாகும். info

• التكبر مانع من الهداية إلى الحق.
2. கர்வம் சத்தியத்தின்பால் நேர்வழிபெறுவதற்கு தடையாக இருக்கின்றது. info

• إخفاق حيل الكفار ومكرهم لإبطال الحق.
3. சத்தியத்தை முறியடிப்பதற்காக நிராகரிப்பாளர்கள் செய்யும் சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். info

• وجوب الاستعداد للآخرة، وعدم الانشغال عنها بالدنيا.
4. உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் மறுமைக்காக நம்மை தயார்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். info