വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
100 : 4

وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ— وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

4.100. யார் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக இஸ்லாமிய நாட்டினை நோக்கிப் புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டாரோ அவர் புலம்பெயரும் பூமியில் அவர்விட்டுவந்த இடத்தை விட மாற்றமான இடத்தை கண்டுகொள்வார். அங்கு கண்ணியத்தையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் பெறுவார். யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டு பின்னர் அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அவருக்கு மரணம் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் அவருக்கு கூலி உறுதியாகிவிட்டது. அவர் புலம்பெயர நாடிய இடத்தை அடையாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• فضل الجهاد في سبيل الله وعظم أجر المجاهدين، وأن الله وعدهم منازل عالية في الجنة لا يبلغها غيرهم.
1. அல்லாஹ்வின் பாதையில் போராடுவது சிறப்புமிக்கது என்பதோடு அதில் ஈடுபடுவோருக்கான கூலியும் அபரிமிதமானது. அவர்களுக்கு சுவனத்தில் யாருமே அடையமுடியாத உயர்ந்த அந்தஸ்துகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். info

• أصحاب الأعذار يسقط عنهم فرض الجهاد مع ما لهم من أجر إن حسنت نيتهم.
2. தகுந்த காரணங்களுடையவர்களுக்கு ஜிஹாது கடமையல்ல. அவர்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் ஜிஹாதில் கலந்து கொள்ளாமலேயே கலந்து கொண்டதற்கான கூலி கிடைக்கும். info

• فضل الهجرة إلى بلاد الإسلام، ووجوبها على القادر إن كان يخشى على دينه في بلده.
3. இஸ்லாமியப் பிரதேசத்துக்கு புலம்பெயர்வது சிறப்புக்குரியதாகும். இஸ்லாமிய நாடல்லாத தனது நாட்டில் மார்க்க அடிப்படையில் வாழமுடியாது என்று அஞ்சினால் இஸ்லாமிய நாட்டினை நோக்கி புலம்பெயர்வது அவசியமாகும். info

• مشروعية قصر الصلاة في حال السفر.
4. பயணத்தில் தொழுகையை சுருக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. info