വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
27 : 30

وَهُوَ الَّذِیْ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَیْهِ ؕ— وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

30.27. அவனே முன்மாதிரியின்றி படைப்பைத் தொடங்கினான். பின்னர் அது அழிந்த பிறகு அதனை மீண்டும் உருவாக்குவான். ஆரம்பமாகப் படைப்பதைவிட மீண்டும் படைப்பது இலகுவானது. இரண்டும் அவனுக்கு இலகுவானதுதான். ஏனெனில் அவன் ஏதேனும் ஒன்றை நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும். கண்ணியமான, பூரணத்துவமான பண்புகள் அனைத்திலும் மிக உயர்ந்த வர்ணணை அவனுக்கே உரியது. அவன் யாவற்றையும் மிகைத்தவன்; அவனை யாரும் மிகைக்க முடியாது. படைப்பிலும் திட்டமிடலிலும் ஞானம் மிக்கவன். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• خضوع جميع الخلق لله سبحانه قهرًا واختيارًا.
1. படைப்புகள் அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வுக்கு அடிபணியத்தான் செய்கின்றன. info

• دلالة النشأة الأولى على البعث واضحة المعالم.
2. ஆரம்ப உருவாக்கம் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான தெளிவான அடையாளமாகும். info

• اتباع الهوى يضل ويطغي.
3. மன இச்சையைப் பின்பற்றுபவது வழிகெடுத்துவிடும்; வரம்பு மீறவைக்கும். info

• دين الإسلام دين الفطرة السليمة.
4. இஸ்லாம் மார்க்கமே நேரான இயல்பு ஏற்றுக்கொள்ளும் மார்க்கமாகும். info