വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
60 : 28

وَمَاۤ اُوْتِیْتُمْ مِّنْ شَیْءٍ فَمَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا وَزِیْنَتُهَا ۚ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ وَّاَبْقٰی ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟۠

28.60. உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த பொருட்கள் யாவும் இவ்வுலக வாழ்வின் நீங்கள் அனுபவிக்கும் இன்பங்களும் அதன் அலங்காரமும்தான். பின்னர் அவை அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ்விடம் கிடைக்கும் மகத்தான கூலியே அற்ப உலக இன்பங்கள், அலங்காரங்களை விடச் சிறந்தது, நிலையானது. நீங்கள் இதனை விளங்கிக் கொண்டு நிலையான இன்பங்களுக்கு அழியக்கூடியவற்றைவிட முன்னுரிமை அளிக்க மாட்டீர்களா? info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• العاقل من يؤثر الباقي على الفاني.
1. அழியக்கூடியதை விட்டுவிட்டு நிலையானதைத் தேர்ந்தெடுப்பவனே அறிவாளியாவான். info

• التوبة تَجُبُّ ما قبلها.
2. பாவமன்னிப்புக் கோரி அல்லாஹ்விடம் திரும்புவதால் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. info

• الاختيار لله لا لعباده، فليس لعباده أن يعترضوا عليه.
3. தெரிவு அல்லாஹ்வுக்கே உரியது. அவனது அடியார்களுக்கல்ல. அவனுக்கு எதிராக ஆட்சேபனை செய்யும் உரிமை அடியார்களுக்கு இல்லை. info

• إحاطة علم الله بما ظهر وما خفي من أعمال عباده.
4. தனது அடியார்களின் மறைவான, வெளிரங்கமான செயல்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் அறிவு சூழ்ந்துள்ளது. info