വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
62 : 17

قَالَ اَرَءَیْتَكَ هٰذَا الَّذِیْ كَرَّمْتَ عَلَیَّ ؗ— لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّیَّتَهٗۤ اِلَّا قَلِیْلًا ۟

17.62. இப்லீஸ் தன் இறைவனிடம் கூறினான்: “நீ எனக்கு சிரம்பணியுமாறு கட்டளையிட்டு கௌரவித்த இந்தப் படைப்பை நீ பார்த்தாயா? இந்த உலக வாழ்வின் இறுதிவரை உயிருடன் என்னை வாழவைத்தால், அவரது சந்ததியினரை கவர்ந்திழுத்து நேரான பாதையை விட்டும் நெறிபிறழச் செய்வேன். அவர்களில் நீ பாதுகாத்த சிலரைத் தவிர. அவர்களே உனது தூய்மையான அடியார்கள்.” info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• من رحمة الله بالناس عدم إنزاله الآيات التي يطلبها المكذبون حتى لا يعاجلهم بالعقاب إذا كذبوا بها.
1. பொய்பிப்பவர்கள் கோரும் சான்றுகளை இறக்காமலிருப்பது அல்லாஹ் மனிதர்கள் மேல் கொண்ட கருணையாகும். அவ்வாறு இறக்கப்பட்டு அவர்கள் அவற்றை மறுத்தால் அவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட்டு விடுவார்கள். info

• ابتلى الله العباد بالشيطان الداعي لهم إلى معصية الله بأقواله وأفعاله.
2. தன் சொல்லாலும் செயலாலும் பாவத்தின்பால் அழைக்கும் ஷைத்தானைக்கொண்டு அல்லாஹ் அடியார்களை சோதிக்கிறான். info

• من صور مشاركة الشيطان للإنسان في الأموال والأولاد: ترك التسمية عند الطعام والشراب والجماع، وعدم تأديب الأولاد.
3. மனிதனின் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் ஷைத்தான் பங்குபெறுவதின் சில வடிவங்கள், சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் உடலுறவுகொள்ளும் போதும் அல்லாஹ்வின் பெயரை கூறாமை, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்காமை என்பனவாகும். info