വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
14 : 12

قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ ۟

12.14. அவர்கள் தம் தந்தையிடம் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருந்தும் ஓநாய் அவரைத் தின்றுவிட்டால் எங்களிடையே எந்த நன்மையும் இல்லை. அவரை ஓநாயிலிருந்து காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளிகளாகிவிடுவோம்.” info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• ثبوت الرؤيا شرعًا، وجواز تعبيرها.
1. மார்க்க அடிப்படையில் கனவு நிரூபனமானது. அதற்கு விளக்கம் கூறுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. info

• مشروعية كتمان بعض الحقائق إن ترتب على إظهارها شيءٌ من الأذى.
2. வெளிப்படுத்தப்பட்டால் தீங்கு நேரும் என்னும் நிலையிலுள்ள சில உண்மைகளை மறைப்பது அனுமதிக்கப்பட்டதாகும். info

• بيان فضل ذرية آل إبراهيم واصطفائهم على الناس بالنبوة.
3. இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சிறப்பு தெளிவாகிறது. தூதுத்துவம் மூலம் மற்ற மக்களைவிட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். info

• الميل إلى أحد الأبناء بالحب يورث العداوة والحسد بين الإِخوة.
4. மற்ற பிள்ளைகளை விட்டு விட்டு ஒரு பிள்ளையின் மீது மட்டும் அதிக அன்பு செலுத்துதல் சகோதரர்களிடையே பொறாமையும் குரோதமும் ஏற்பட காரணமாக அமைகிறது. info