വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - അൽ മുഖ്തസ്വർ ഫീ തഫ്സീറിൽ ഖുർആനിൽ കരീം (തമിഴ് വിവർത്തനം)

external-link copy
123 : 11

وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ— وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠

11.123. வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றின் அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவற்றில் எதுவும் அவனை விட்டும் மறைவதில்லை. மறுமை நாளில் அவன் பக்கமே அனைத்து விவகாரங்களும் திரும்பும். எனவே -தூதரே!- அவனை மட்டுமே வணங்குவீராக. உமது எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்திருப்பீராக. நீங்கள் செய்பவற்றை உம் இறைவன் கவனிக்காமல் இல்லை. மாறாக அவற்றை அவன் நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான். info
التفاسير:
ഈ പേജിലെ ആയത്തുകളിൽ നിന്നുള്ള പാഠങ്ങൾ:
• بيان الحكمة من القصص القرآني، وهي تثبيت قلب النبي صلى الله عليه وسلم وموعظة المؤمنين.
1.குர்ஆன் கூறும் சம்பவங்களின் நோக்கம், நபியவர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதும் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்குவதுமாகும். info

• انفراد الله تعالى بعلم الغيب لا يشركه فيه أحد.
2. மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான். அதில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. info

• الحكمة من نزول القرآن عربيًّا أن يعقله العرب؛ ليبلغوه إلى غيرهم.
3. குர்ஆன் அரபு மொழியில் இறக்கப்பட்டதன் நோக்கம், அரபுக்கள் அதனைப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான். info

• اشتمال القرآن على أحسن القصص.
4.அல்குர்ஆன் அழகிய சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. info