വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

പേജ് നമ്പർ:close

external-link copy
32 : 39

فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَی اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ— اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟

32. அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா? info
التفاسير:

external-link copy
33 : 39

وَالَّذِیْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟

33. உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள். info
التفاسير:

external-link copy
34 : 39

لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ— ذٰلِكَ جَزٰٓؤُا الْمُحْسِنِیْنَ ۟ۚۖ

34. அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும். info
التفاسير:

external-link copy
35 : 39

لِیُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِیْ عَمِلُوْا وَیَجْزِیَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

35. அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான். info
التفاسير:

external-link copy
36 : 39

اَلَیْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ ؕ— وَیُخَوِّفُوْنَكَ بِالَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟ۚ

36. தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை. info
التفاسير:

external-link copy
37 : 39

وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ؕ— اَلَیْسَ اللّٰهُ بِعَزِیْزٍ ذِی انْتِقَامٍ ۟

37. எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க ஆற்றல் உடையவனாக இல்லையா? info
التفاسير:

external-link copy
38 : 39

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلْ اَفَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِیَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِیْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ— قُلْ حَسْبِیَ اللّٰهُ ؕ— عَلَیْهِ یَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ۟

38. (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.'' info
التفاسير:

external-link copy
39 : 39

قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ— فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ

39. (மேலும், நபியே!) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் நிலைமையில் இருந்து கொண்டு நீங்கள் (செய்யக்கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும் (என் நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக் கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் தவறு என்பதைப்) பின்னர், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.'' info
التفاسير:

external-link copy
40 : 39

مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟

40. இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது? (என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.) info
التفاسير: