വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

പേജ് നമ്പർ:close

external-link copy
112 : 26

قَالَ وَمَا عِلْمِیْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ

112. அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும், info
التفاسير:

external-link copy
113 : 26

اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰی رَبِّیْ لَوْ تَشْعُرُوْنَ ۟ۚ

113. (இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? info
التفاسير:

external-link copy
114 : 26

وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِیْنَ ۟ۚ

114. நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது. info
التفاسير:

external-link copy
115 : 26

اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ؕ

115. பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
116 : 26

قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ

116. அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
117 : 26

قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ

117. அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.'' info
التفاسير:

external-link copy
118 : 26

فَافْتَحْ بَیْنِیْ وَبَیْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِیْ وَمَنْ مَّعِیَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟

118. ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார். info
التفاسير:

external-link copy
119 : 26

فَاَنْجَیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۚ

119. ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம். info
التفاسير:

external-link copy
120 : 26

ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِیْنَ ۟ؕ

120. இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம். info
التفاسير:

external-link copy
121 : 26

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟

121. நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை. info
التفاسير:

external-link copy
122 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

122. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன். info
التفاسير:

external-link copy
123 : 26

كَذَّبَتْ عَادُ ١لْمُرْسَلِیْنَ ۟ۚۖ

123. ‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள். info
التفاسير:

external-link copy
124 : 26

اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ

124. அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா? info
التفاسير:

external-link copy
125 : 26

اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ

125. நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்; info
التفاسير:

external-link copy
126 : 26

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ

126. ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள். info
التفاسير:

external-link copy
127 : 26

وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ— اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ

127. இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது. info
التفاسير:

external-link copy
128 : 26

اَتَبْنُوْنَ بِكُلِّ رِیْعٍ اٰیَةً تَعْبَثُوْنَ ۟ۙ

128. உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே! info
التفاسير:

external-link copy
129 : 26

وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ ۟ۚ

129. நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
130 : 26

وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِیْنَ ۟ۚ

130. நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள். info
التفاسير:

external-link copy
131 : 26

فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ

131. அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள். info
التفاسير:

external-link copy
132 : 26

وَاتَّقُوا الَّذِیْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۟ۚ

132. உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள். info
التفاسير:

external-link copy
133 : 26

اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِیْنَ ۟ۚۙ

133. சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
134 : 26

وَجَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚ

134. தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்). info
التفاسير:

external-link copy
135 : 26

اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟ؕ

135. (அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
136 : 26

قَالُوْا سَوَآءٌ عَلَیْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِیْنَ ۟ۙ

136. அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே! info
التفاسير: