വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് വിവർത്തനം - അബ്ദുൽ ഹമീദ് ബാഖവി

പേജ് നമ്പർ:close

external-link copy
88 : 20

فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰی ۚۙ۬— فَنَسِیَ ۟ؕ

88. பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
89 : 20

اَفَلَا یَرَوْنَ اَلَّا یَرْجِعُ اِلَیْهِمْ قَوْلًا ۙ۬— وَّلَا یَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ۟۠

89. (என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? info
التفاسير:

external-link copy
90 : 20

وَلَقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ یٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ ۚ— وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِیْ وَاَطِیْعُوْۤا اَمْرِیْ ۟

90. இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
91 : 20

قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَیْهِ عٰكِفِیْنَ حَتّٰی یَرْجِعَ اِلَیْنَا مُوْسٰی ۟

91. அதற்கவர்கள் ‘‘மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரை இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள். info
التفاسير:

external-link copy
92 : 20

قَالَ یٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَیْتَهُمْ ضَلُّوْۤا ۟ۙ

92. (மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது? info
التفاسير:

external-link copy
93 : 20

اَلَّا تَتَّبِعَنِ ؕ— اَفَعَصَیْتَ اَمْرِیْ ۟

93. நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.) info
التفاسير:

external-link copy
94 : 20

قَالَ یَبْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْیَتِیْ وَلَا بِرَاْسِیْ ۚ— اِنِّیْ خَشِیْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَیْنَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِیْ ۟

94. அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
95 : 20

قَالَ فَمَا خَطْبُكَ یٰسَامِرِیُّ ۟

95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார். info
التفاسير:

external-link copy
96 : 20

قَالَ بَصُرْتُ بِمَا لَمْ یَبْصُرُوْا بِهٖ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِیْ نَفْسِیْ ۟

96. அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான். info
التفاسير:

external-link copy
97 : 20

قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَكَ فِی الْحَیٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ ۪— وَاِنَّ لَكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ ۚ— وَانْظُرْ اِلٰۤی اِلٰهِكَ الَّذِیْ ظَلْتَ عَلَیْهِ عَاكِفًا ؕ— لَنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَنَنْسِفَنَّهٗ فِی الْیَمِّ نَسْفًا ۟

97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார். info
التفاسير:

external-link copy
98 : 20

اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِیْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ— وَسِعَ كُلَّ شَیْءٍ عِلْمًا ۟

98. உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்). info
التفاسير: