ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್

external-link copy
136 : 6

وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَرْثِ وَالْاَنْعَامِ نَصِیْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآىِٕنَا ۚ— فَمَا كَانَ لِشُرَكَآىِٕهِمْ فَلَا یَصِلُ اِلَی اللّٰهِ ۚ— وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ یَصِلُ اِلٰی شُرَكَآىِٕهِمْ ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟

இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும். info
التفاسير: