ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
14 : 28

وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰۤی اٰتَیْنٰهُ حُكْمًا وَّعِلْمًا ؕ— وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

28.14. -அவர் இளமைப் பருவத்தை அடைந்து பலம் பெற்றபோது- நாம் நபித்துவத்திற்கு முன் அவருக்கு இஸ்ரவேலர்களின் மக்களின் மார்க்கத்தில் புரிதலையும் ஞானத்தையும் வழங்கினோம். மூஸாவுக்கு அவரது கீழ்ப்படிதலுக்கேற்ப நாம் கூலி வழங்கியதுபோன்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்திலும் நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குகின்றோம். info
التفاسير:

external-link copy
15 : 28

وَدَخَلَ الْمَدِیْنَةَ عَلٰی حِیْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِیْهَا رَجُلَیْنِ یَقْتَتِلٰنِ ؗ— هٰذَا مِنْ شِیْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ ۚ— فَاسْتَغَاثَهُ الَّذِیْ مِنْ شِیْعَتِهٖ عَلَی الَّذِیْ مِنْ عَدُوِّهٖ ۙ— فَوَكَزَهٗ مُوْسٰی فَقَضٰی عَلَیْهِ ؗ— قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیْنٌ ۟

28.15. மக்கள் தமது வீடுகளில் ஓய்வெடுக்கும் நேரத்தில் மூஸா நகரத்தில் நுழைந்தார். அங்கு இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவர் அவரது சமூகமான இஸ்ரவேலர்களின் மக்களைச் சேர்ந்தவர். மற்றொருவர் மூஸாவின் எதிரியான ஃபிர்அவ்னின் கிப்தி குலத்தைச் சேர்ந்தவர். அவரது சமூகத்தைச் சேர்ந்தவர் எதிரி சமூகமான கிப்தி குலத்தை சேர்ந்தவருக்கு எதிராக மூஸாவிடம் உதவி கோரினார். மூஸா கிப்தி குலத்தைச் சேர்ந்தவனை தம் கையால் ஒரு குத்து குத்தினார். அந்த பலமான குத்தினால் அவர் செத்து மடிந்தார். மூஸா கூறினார்: “நிச்சயமாக இது ஷைத்தானின் அழகுபடுத்திய, ஏமாற்றமான செயலாகும். நிச்சயமாக அவன் தன்னைப் பின்பற்றுபவர்களை வழிகெடுப்பவனாகவும் பகிரங்கமான பகைவனாகவும் இருக்கின்றான். அவனது பகைமையின் காரணத்தாலும் அவன் என்னை வழிகெடுக்க நினைக்கும் வழிகேடன் என்பதுமே என்னிடமிருந்து இச்செயல் நிகழ்ந்ததற்கான காரணமாகும். info
التفاسير:

external-link copy
16 : 28

قَالَ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ فَاغْفِرْ لِیْ فَغَفَرَ لَهٗ ؕ— اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

28.16. தன் மூலமாக நிகழ்ந்ததை ஒப்புக் கொண்டவராக மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்: “என் இறைவா! நிச்சயமாக அந்த கிப்தியைக் கொலை செய்து எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். எனவே என் பாவத்தை மன்னித்துவிடுவாயாக.” அல்லாஹ் அவரை மன்னித்ததை நமக்குத் தெளிவுபடுத்துகிறான். நிச்சயமாக அவன் தன்அடியார்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
17 : 28

قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَیَّ فَلَنْ اَكُوْنَ ظَهِیْرًا لِّلْمُجْرِمِیْنَ ۟

28.17. தொடர்ந்தும் மூஸாவின் பிரார்த்தனையைப் பற்றி இடம்பெறுகிறது, மூஸா தனது பிரார்த்தனையில் மேலும் கூறினார்: “என் இறைவா! நீர் எனக்கு அருட்கொடையாக வழங்கிய பலம், ஞானம், அறிவு ஆகியவற்றினால் நான் ஒருபோதும் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு உதவியாளனாக இருக்கவேமாட்டேன். info
التفاسير:

external-link copy
18 : 28

فَاَصْبَحَ فِی الْمَدِیْنَةِ خَآىِٕفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسْتَنْصَرَهٗ بِالْاَمْسِ یَسْتَصْرِخُهٗ ؕ— قَالَ لَهٗ مُوْسٰۤی اِنَّكَ لَغَوِیٌّ مُّبِیْنٌ ۟

28.18. கிப்தி குலத்தைச் சேர்ந்தவனை கொன்றதனால் என்ன நிகழுமோ என எதிர்பார்த்தவராக நகரத்தில் பயத்துடன் காணப்பட்டார். அப்போது நேற்று கிப்தி குலத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராக உதவிதேடிய அதே மனிதன் இன்றும் மற்றொரு கிப்தி மனிதனுக்கு எதிராக உதவி தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். மூஸா அவனிடம் கூறினார்: “நிச்சயமாக நீ கலகக்காரனாய் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளவன்.” info
التفاسير:

external-link copy
19 : 28

فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ یَّبْطِشَ بِالَّذِیْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ— قَالَ یٰمُوْسٰۤی اَتُرِیْدُ اَنْ تَقْتُلَنِیْ كَمَا قَتَلْتَ نَفْسًا بِالْاَمْسِ ۗ— اِنْ تُرِیْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِی الْاَرْضِ وَمَا تُرِیْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِیْنَ ۟

28.19. மூஸா, தனக்கும் இஸ்ரவேலர்களைச் சேர்ந்த அந்த மனிதனுக்கும் எதிரியாக இருந்த கிப்தியைப் பிடிக்க நாடியபோது இஸ்ரேலிய குலத்தைச் சேர்ந்த அந்த மனிதன், மூஸா தன்னைப் பார்த்து (நீ தெளிவான கலகக்காரன்) எனக் கூறியதால், மூஸா தன்னைத்தான் தாக்கப் போகிறார் என எண்ணியவனாகக் கூறினான்: “நேற்று ஒரு மனிதனைக் கொன்றவாறு என்னையும் கொல்ல நினைக்கிறீரா? நீர் மக்களைக் கொலை செய்து அநியாயக்காரனாக விரும்புகின்றாய். சண்டையிடும் இரு மனிதர்களிடையே சமாதானம் செய்பவனாக இருக்க விரும்பவில்லை.” info
التفاسير:

external-link copy
20 : 28

وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِیْنَةِ یَسْعٰی ؗ— قَالَ یٰمُوْسٰۤی اِنَّ الْمَلَاَ یَاْتَمِرُوْنَ بِكَ لِیَقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّیْ لَكَ مِنَ النّٰصِحِیْنَ ۟

28.20. தகவல் பரவியதும் மூஸா மீது கொண்ட அன்பினால் அவர் பிடிபட்டுவிடுவார் என்பதால் நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் ஓடோடி வந்து அவரிடம் கூறினார்: “மூஸாவே! நிச்சயமாக ஃபிர்அவ்னின் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்தவர்கள் உம்மைக் கொல்வதற்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீர் ஊரிலிருந்து வெளியேறி விடுவீராக. அவர்கள் உம்மைப் பிடித்துக் கொன்றுவிடக்கூடாது என்பதால் நிச்சயமாக நான் உமக்கு அறிவுரை வழங்குபவராக இருக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
21 : 28

فَخَرَجَ مِنْهَا خَآىِٕفًا یَّتَرَقَّبُ ؗ— قَالَ رَبِّ نَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟۠

28.21. மூஸா நன்மையை நாடும் அந்த மனிதரின் கட்டளையைச் செயல்படுத்தினார். தனக்கு என்ன நேருமோ என கண்காணித்துக்கொண்டு பயந்தவராக ஊரைவிட்டு வெளியேறிவிட்டார். மூஸா தம் இறைவனிடம் பிரார்த்தித்தவராகக் கூறினார்: “என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக. அவர்கள் எனக்கு எந்த தீங்கும் இழைத்துவிடக்கூடாது.” info
التفاسير:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• الاعتراف بالذنب من آداب الدعاء.
1. தவறை ஒத்துக்கொள்வது பிரார்த்தனையின் ஒழுக்கங்களில் ஒன்றாகும். info

• الشكر المحمود هو ما يحمل العبد على طاعة ربه، والبعد عن معصيته.
2. அடியானை இறைவழிபாட்டுக்கு, பாவங்களிலிருந்து விலகியிருப்பதற்கு தூண்டும் நன்றி செலுத்தலே புகழத்தக்கதாகும். info

• أهمية المبادرة إلى النصح خاصة إذا ترتب عليه إنقاذ مؤمن من الهلاك.
3. அறிவுரை வழங்குவததற்கு முன்வருவதன் முக்கியத்துவம். குறிப்பாக ஒரு நம்பிக்கையாளனை அழிவிலிருந்து காப்பாற்றும் விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும். info

• وجوب اتخاذ أسباب النجاة، والالتجاء إلى الله بالدعاء.
4. தப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், பிரார்த்தனையின் மூலம் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதும் அவசியமாகும். info