ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ

external-link copy
49 : 2

وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟

2.49. இஸ்ராயீலின் மக்களே! ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள். அவர்கள் உங்களை பல்வேறு வேதனைகளில் ஆழ்த்தியிருந்தார்கள். உங்கள் ஆண்மக்கள் எவரையும் விட்டுவைக்கமால் கொன்று கொண்டிருந்தார்கள். உங்களை மென்மேலும் இழிவுபடுத்த வேண்டுமென்பதற்காக தமக்குச் சேவை புரிய உங்களின் பெண்மக்களை உயிருடன் விட்டுவந்தார்கள். ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனைப் பின்பற்றியவர்களிடமிருந்தும் அல்லாஹ் உங்களைக் காப்பாற்றியமை, நீங்கள் நன்றி செலுத்துகிறீர்களா என்பதற்கான உங்கள் இறைவனின் பெரும் பரீட்சையாகும். info
التفاسير:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• عِظَمُ نعم الله وكثرتها على بني إسرائيل، ومع هذا لم تزدهم إلا تكبُّرًا وعنادًا.
1. இஸ்ராயீலின் மக்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியபோதும் அது அவர்களுக்கு கர்வத்தையும் பிடிவாதத்தையும் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லை. info

• سَعَةُ حِلم الله تعالى ورحمته بعباده، وإن عظمت ذنوبهم.
2. அல்லாஹ் தன் அடியார்கள் விஷயத்தில் பொறுமையாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான், அடியார்கள் பெரும் பாவங்களைச் செய்தாலும் சரியே. info

• الوحي هو الفَيْصَلُ بين الحق والباطل.
3. சத்தியத்தையும் அசத்தியத்தையும் நிர்ணயிப்பது வஹியே ஆகும். info