ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
6 : 76

عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟

அ(ந்த நறுமணமான)து, ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள். info
التفاسير:

external-link copy
7 : 76

یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟

அவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும். info
التفاسير:

external-link copy
8 : 76

وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟

இன்னும், அவர்கள் உணவை - அதன் பிரியம் (-அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் - ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள். info
التفاسير:

external-link copy
9 : 76

اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟

“நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை. info
التفاسير:

external-link copy
10 : 76

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟

நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்.” info
التفاسير:

external-link copy
11 : 76

فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ

ஆக, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். இன்னும், அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் (பிரகாசத்தையும் அழகையும்) மன மகிழ்ச்சியையும் கொடுப்பான். info
التفاسير:

external-link copy
12 : 76

وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ

இன்னும், அவர்கள் (வணக்க வழிபாட்டில், பாவங்களை விட்டு விலகி இருப்பதில், சோதனைகளை தாங்கிக் கொள்வதில்) பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான். info
التفاسير:

external-link copy
13 : 76

مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ— لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ

அவர்கள் அதில் கட்டில்களில் சாய்ந்தவர்களாக (சொர்க்க இன்பங்களை அனுபவிப்பவர்களாக) இருப்பார்கள். அதில் சூரியனையோ குளிரையோ காண மாட்டார்கள். (அங்கு உஷ்ணமும் இருக்காது, கடும் குளிரும் இருக்காது.) info
التفاسير:

external-link copy
14 : 76

وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟

இன்னும், அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும். info
التفاسير:

external-link copy
15 : 76

وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَ ۟ۙ

இன்னும், வெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்களுடனும் கண்ணாடிகளாக இருக்கிற கெண்டிகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். info
التفاسير:

external-link copy
16 : 76

قَوَارِیْرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟

அவை வெள்ளி கலந்த கண்ணாடிகளாகும். அவற்றை (-அவற்றின் அளவையும் அழகையும்) அவர்கள் (-சொர்க்கவாசிகளுக்கு பானம் புகட்டுகின்ற பணியாளர்கள்) துல்லியமாக நிர்ணயிப்பார்கள். info
التفاسير:

external-link copy
17 : 76

وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ

இன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும். info
التفاسير:

external-link copy
18 : 76

عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟

அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும். info
التفاسير:

external-link copy
19 : 76

وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ— اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟

இன்னும் (சிறுவர்களாகவே) நிரந்தரமாக இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அ(ந்த சிறு)வர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை நினைப்பீர். info
التفاسير:

external-link copy
20 : 76

وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟

இன்னும் (சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பேராட்சியையும் நீர் பார்ப்பீர். info
التفاسير:

external-link copy
21 : 76

عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ— وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ— وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟

அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளிப் புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான். info
التفاسير:

external-link copy
22 : 76

اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠

நிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்பு நன்றி அறியப்பட்டதாக (பாராட்டுக்குரியதாக, நற்கூலிகளுக்கு தகுந்ததாக) இருக்கும். info
التفاسير:

external-link copy
23 : 76

اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ

நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். info
التفاسير:

external-link copy
24 : 76

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ

ஆக, உமது இறைவனின் கட்டளைக்காக (-அவன் உம்மீது கட்டாயமாக்கிய கடமைகளையும் சுமத்திய பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்) நீர் பொறுமையாக இருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்! info
التفاسير:

external-link copy
25 : 76

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ

இன்னும், உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக! info
التفاسير: