ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
6 : 60

لَقَدْ كَانَ لَكُمْ فِیْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ یَرْجُوا اللّٰهَ وَالْیَوْمَ الْاٰخِرَ ؕ— وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟۠

உங்களுக்கு - (அதாவது,) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசைவைப்பவராக (அஞ்சுகிறவர்களாக) இருப்பவர்களுக்கு - அவர்களிடம் (-இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன், நிறைவானவன், மகா புகழுக்குரியவன் ஆவான். info
التفاسير:

external-link copy
7 : 60

عَسَی اللّٰهُ اَنْ یَّجْعَلَ بَیْنَكُمْ وَبَیْنَ الَّذِیْنَ عَادَیْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ— وَاللّٰهُ قَدِیْرٌ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
8 : 60

لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟

எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, இன்னும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் (அதாவது,) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்கள் மீது அன்பு வைக்கிறான். info
التفاسير:

external-link copy
9 : 60

اِنَّمَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ قَاتَلُوْكُمْ فِی الدِّیْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰۤی اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ ۚ— وَمَنْ یَّتَوَلَّهُمْ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟

நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான். அதாவது, அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு துணைபோவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கிறான்). அவர்களை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
10 : 60

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ ؕ— اَللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِهِنَّ ۚ— فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَی الْكُفَّارِ ؕ— لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ یَحِلُّوْنَ لَهُنَّ ؕ— وَاٰتُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ ؕ— وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَلْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا ؕ— ذٰلِكُمْ حُكْمُ اللّٰهِ ؕ— یَحْكُمُ بَیْنَكُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான (–நம்பிக்கை கொண்ட) பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை (-இறைநம்பிக்கையை) மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை நம்பிக்கை கொண்ட முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (-அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (உங்கள் உரிமையில்) தடுத்து வைக்காதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். (நீங்கள் அதை கொடுத்து விடுங்கள்!) இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
11 : 60

وَاِنْ فَاتَكُمْ شَیْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَی الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰتُوا الَّذِیْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا ؕ— وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْۤ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ ۟

உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம் மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் எந்த அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! info
التفاسير: