ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
158 : 6

هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِیَهُمُ الْمَلٰٓىِٕكَةُ اَوْ یَاْتِیَ رَبُّكَ اَوْ یَاْتِیَ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ ؕ— یَوْمَ یَاْتِیْ بَعْضُ اٰیٰتِ رَبِّكَ لَا یَنْفَعُ نَفْسًا اِیْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِیْۤ اِیْمَانِهَا خَیْرًا ؕ— قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ ۟

வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ; அல்லது, உம் இறைவன் வருவதையோ; அல்லது, உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வருவதையோ தவிர அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருக்காத; அல்லது, தன் நம்பிக்கையில் ஒரு நன்மையையும் செய்திருக்காத ஓர் ஆன்மாவிற்கு அதன் நம்பிக்கை(யும் நன்மையும்) பலனளிக்காது. “(நீங்கள் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்” என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير: