ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
148 : 6

سَیَقُوْلُ الَّذِیْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَیْءٍ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰی ذَاقُوْا بَاْسَنَا ؕ— قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَا ؕ— اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ۟

“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் இணைவைத்திருக்க மாட்டோம்; இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர் (-அனுபவித்தனர்). (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: (“நீங்கள் இவ்வாறு செய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) கல்வி (ஆதாரம்) ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வீண் சந்தேகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. இன்னும், (பொய்யை) கற்பனை செய்பவர்களாகவே தவிர நீங்கள் இல்லை.’’ info
التفاسير: