ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
138 : 6

وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

இன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான். info
التفاسير: