ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
4 : 57

هُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ— یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ— وَهُوَ مَعَكُمْ اَیْنَ مَا كُنْتُمْ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

அவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
5 : 57

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟

வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன. info
التفاسير:

external-link copy
6 : 57

یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ؕ— وَهُوَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

அவன் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். இன்னும், நெஞ்சங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
7 : 57

اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِیْنَ فِیْهِ ؕ— فَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِیْرٌ ۟

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அ(-ந்த செல்வத்)திலிருந்து தர்மம் செய்யுங்கள்! ஆக, (மனிதர்களே!) உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு. info
التفاسير:

external-link copy
8 : 57

وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚ— وَالرَّسُوْلُ یَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِیْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟

அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு இந்த தூதர் உங்களை அழைக்கிறார். திட்டமாக அவன் (உங்களிடம்) உங்கள் சத்திய வாக்கை வாங்கி இருக்கிறான். நீங்கள் (ஒரு நாள்) நம்பிக்கையாளராக ஆக நாடினால் (இதுதான் சரியான நேரம், இப்போதே நம்பிக்கை கொள்ளுங்கள். மரணம் எப்போது வரும் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்). info
التفاسير:

external-link copy
9 : 57

هُوَ الَّذِیْ یُنَزِّلُ عَلٰی عَبْدِهٖۤ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ لِّیُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ— وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِیْمٌ ۟

அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகிறான், அவன் உங்களை (அதன் மூலம்) இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான். info
التفاسير:

external-link copy
10 : 57

وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ— اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقَاتَلُوْاؕ— وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠

அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். இன்னும், (உங்கள்) எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
11 : 57

مَنْ ذَا الَّذِیْ یُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَیُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗۤ اَجْرٌ كَرِیْمٌ ۟

யார் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுப்பார்? அப்படி அவர் கொடுத்தால் அவன் அவருக்கு அதை பன்மடங்காக்குவான். இன்னும், அவருக்கு கண்ணியமான வெகுமதி (-சொர்க்கம்) உண்டு. info
التفاسير: