ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
52 : 51

كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟۫

இவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர. info
التفاسير:

external-link copy
53 : 51

اَتَوَاصَوْا بِهٖ ۚ— بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ

(முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
54 : 51

فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟ؗ

ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை. info
التفاسير:

external-link copy
55 : 51

وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟

இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும். info
التفاسير:

external-link copy
56 : 51

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟

ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. info
التفاسير:

external-link copy
57 : 51

مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟

நான் அவர்களிடம் (அவர்கள் எனது படைப்புகளுக்கு) வாழ்வாதாரம் எதையும் (கொடுக்க வேண்டுமென்று) நாடவில்லை. இன்னும், அவர்கள் என(து படைப்புகளு)க்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை. info
التفاسير:

external-link copy
58 : 51

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன். info
التفاسير:

external-link copy
59 : 51

فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟

ஆக, நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போன்று. ஆகவே, அவர்கள் (தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம். info
التفاسير:

external-link copy
60 : 51

فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠

ஆக, நிராகரித்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனை எந்த நாளில் இறங்கும் என்று) – அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களோ – அந்த அவர்களுடைய நாளில் கேடுதான். info
التفاسير: