ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

external-link copy
89 : 5

لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَیْمَانَ ۚ— فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِیْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِیْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِیْرُ رَقَبَةٍ ؕ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ ؕ— ذٰلِكَ كَفَّارَةُ اَیْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ— وَاحْفَظُوْۤا اَیْمَانَكُمْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

உங்கள் சத்தியங்களில் (எண்ணம் இல்லாமல் செய்யப்படும்) வீணான சத்தியத்திற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்திய (பின்னர் அதை மீறிய)தற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது, அவர்களுக்கு ஆடையளிப்பது; அல்லது, ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும். (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இவைதான் நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரமாகும். இன்னும், உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்லாஹ் உங்களுக்கு மார்க்க சட்டங்களை கற்பித்தான். ஆகவே, அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ், தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான். info
التفاسير: